நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது

நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது

நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது என பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு டி.வி. ஒன்றுக்கு நடிகர் பொசானி முரளி கிருஷ்ணா பேட்டி அளித்தார். அப்போது நடிகை ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து கேள்வி கேட்ட தொகுப்பாளர், ‘சினிமாவில் விலை மாதுகளும், புரோக்கர்களும் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
நடிகைகளை விலை மாது என்று குறிப்பிடும் வகையில் அவர் கேட்டகேள்வி, தெலுங்கு படகுழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு தெலுங்கு பட உலகம் சார்பில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த டி.வி. சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
டி.வி.தொகுப்பாளரின் கேள்வியை கேட்டு ஆவேசப்பட்ட ரகுல் பிரீத்திசிங், “தற்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் ‘டிஆர்பி’ ரேட்டை உயர்த்த எதுவும் செய்கிறார்கள். இந்த பேட்டி எடுத்தவர் வரம்பு மீறி பேசி இருக்கிறார்கள். என் பெற்றோருக்கு தெலுங்கு தெரியாது. தெரிந்து இருந்தால், இப்படித்தான் திரை உலகினர் இருக்கிறார்களா? என்று நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
நடிகை லட்சுமி மஞ்சு, “எங்களை வைத்து பணம் சம்பாதிக்க மீடியாக்கள் நினைக்கின்றன. தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த கேள்வியை கேட்டவரை சும்மா விடக்கூடாது” என்று ஆவேசப்பட்டுள்ளார்.

Previous பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை
Next விஜய் சேதுபதியுடன் மூன்றாவது படத்தில் இணையும் நடிகை

About author

You might also like

சினிமா

ஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா…! ஷாக்கில் ரசிகர்கள்…!

ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். 60 வயதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரின் குரல் ஒலித்ததில், நாடு கடந்தும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. தன் விடா முயற்ச்சியால் உயர்ந்தவர் இவர் .

சினிமா

கரு படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது, இவர் நடித்துள்ளாரா?

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. இப்படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் ஒரு பிரபல டெக்னிஷியன் நடித்துள்ளார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டது, ஆனால், தற்போது வரை யார் என்று தெரியாமல் இருந்தது. இன்று நடந்த

சினிமா

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால