பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை

பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை

மன அழுத்தம் காரணமாக பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா ரெட்டி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கு டி.வி. நடிகை ராதிகா ரெட்டி. டெலிவிஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராதிகா ரெட்டிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் 6 மாதத்துக்கு முன்பே ராதிகா ரெட்டி, கணவரை விவாகரத்து செய்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இவருக்கு 14 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக ராதிகா ரெட்டி மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ராதிகா ரெட்டியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், “மன அழுத்தம் காரணமாக என்னை நானே கொலை செய்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மூளையே எனக்கு எதிரி” என்று எழுதி வைத்து இருந்தார். ராதிகா ரெட்டி மரணம் தெலுங்கு நடிகர்-நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous விஜய் சேதுபதிக்கு எதிராக முறைப்பாடு?
Next நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது

About author

You might also like

சினிமா

22 வயதான பிரபல பாடகர் சுட்டுக் கொலை ..! இந்தியாவில் பரபரப்பு..!

திரைதுறையையும் விட்டு வைக்காத காதல் கொலைகள். அட ஆமாங்க பிரபல பாடகர் சுட்டுக் கொல்லப் பட்டதும் அதற்காகவா. ! எல்லா திரை துறைக்கும் இதே நிலை தான் . பஞ்சாபில் இளம் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

புதிய முகம் 2 விரைவில்….

புதிய முகம் 2 திரைப்படத்தின் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது. சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் மேனன், புதிய முகம் 2ம் பாகத்தை இயக்க ரெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக

சினிமா

ஜி.வி பிரகாஷின் கடுமையான டுவிட்டர்

ஐ.பி.எல் போட்டியை ரசிக்கச் செல்வோர் தொடர்பில் பிரபல இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கடுமையான டுவிட் பதிவொன்றை செய்துள்ளார். ஐபிஎல் போட்டியை காண பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா.. என ஜி.வி.பிரகாஷ்