வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும், வெங்காயத்தின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்…
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
உடல் பருமனை குறைக்க வெங்காயத்தை பச்சையாகவே சாப்பிடுங்க
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.

பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

Previous சினிமாவை சிலர் கேவலமாக பேசுகின்றார் என காஜல் குற்றச்சாட்டு
Next அடடா மிளகில் இத்தனை நலன்களா?

About author

You might also like

மருத்துவம்

ஆண்மையை அதிகரிக்கப் பயன்படும் பப்பாளி விதை

ஆண்மையை அதிகரித்துக் கொள்வதற்கு பப்பாளி விதைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், வாழ்;க்கை முறைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆண்மை குறைவு ஏற்படுகின்றது. அதிகளவு செலவு செய்யாது, ஆண்மைப் பிரச்சினைக்கு மிகவும் எளிய

மருத்துவம்

கர்ப்பிணி பெண்களுக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு செய்வது ஏன்..!? இதோ ஆச்சர்யபட வைக்கும் உண்மைகள்…!

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி

மருத்துவம்

உடல் எடையை குறைக்க உதவும் வாழைத்தண்டு

நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்காக போராடி வரும் நிலையில், மிகவும் குறைந்த செலவில் வாழைத்தண்டின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல்