உடற் பயிற்சிகளின் அரசன் யார் தெரியுமா?

உடற் பயிற்சிகளின் அரசன் யார் தெரியுமா?

உடற் பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும், எனினும் எந்த உடற்பயிற்சி மிகவும் சிறந்தது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
உடற்பயிற்சிகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. நடைப்பயிற்சியை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது 20 நிமிடங்கள்; அதிகபட்சமாக 45 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும். வாரத்துக்கு 5 நாட்களாவது நடக்க வேண்டும். அதற்குத் தேவையான உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு, உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எப்போது நடந்தாலும் முதல் 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும். அடுத்து நடை வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி 5 நிமிடங்களுக்கு மீண்டும் மெதுவாக நடக்க வேண்டும். நடைப்பயிற்சியின்போது தனியாக நடப்பதைவிடத் துணையுடன் நடப்பது நல்லது. துணையுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது, பாதையில் கவனம் தவறி தடுமாறிவிடக்கூடாது என்பதும் முக்கியம்.

ஆரம்பத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். போகப்போக தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளில் 3 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். அதுபோல் ஆரம்பத்தில் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கத் தொடங்கி, தினமும் 5 நிமிடங்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாட்கள் ஆக ஆக வேகத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம்.

நடக்கும்போது அதிகபட்சம் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 120 முறை இருக்க வேண்டும் அல்லது இப்படியும் தெரிந்துகொள்ளலாம்: துணையுடன் நடக்கும்போது, அவருக்குக் கேட்கிற அளவுக்குப் பேச முடிகிறது என்றால், அதுவே நீங்கள் அதிகபட்சம் மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி வேகம் என வைத்துக்கொள்ளலாம்.

நடக்கும் முன்னரும் பின்னரும் தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம். சிறிதளவு தளர்வான, நடப்பதற்கு வசதியான ஆடைகளையே அணிய வேண்டும். முக்கியமாக, கச்சிதமாகப் பொருந்தும் மார்புக் கச்சையை அணிந்துகொள்ள வேண்டும். காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.

Previous தமிழக தயாரிப்பாளர்களுக்கு கரம் கொடுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்
Next குளிர்காலத்தில் தீவிரமாகும் பொடுகுப் பிரச்சினைக்கு தீர்வு காண சில வழிகள்

About author

You might also like

மருத்துவம்

கையில்(விரலில்) எந்த இடத்தில் அழுத்தினால் என்ன நோய் குணமாகும் .!? இதோ உங்களுக்காக.நீங்களும் பயன்பெற்று நண்பர்களும் பெயன் பெற பகிருங்கள்..!

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! – இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல்

மருத்துவம்

சிறுநீர் கழித்தவுடன் மர்ம பிரதேசத்தில் எரிச்சல் இருக்கிறதா..? இதோ உடனடி தீர்வு..!

செயற்கையை விரும்பும் நாம் இயற்கையை விரும்புவதில்லை. அதனால் எத்தனை எத்தனை துன்பங்கள்.!? இலகுவான இவற்றை வைத்துக் கொண்டு எதற்கோ திரிகிறோம்..! கற்பூரவல்லி இது ஓர் அற்புதமான மூலிகை செடி இது நம்ம ஊர்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்

மருத்துவம்

1 தொடக்கம் 10 வரை மிளகு சாப்பிட்டால் என்ன நடக்கும்..? நிமிடத்தில் 10 நோய்களில் தீர்வு …!

இயற்கை மருத்துவங்களை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நோய்களுக்கு காரணம் . மிளகு மருத்துவம் உங்களுக்காக.. * ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக. * இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி