சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைக்க எளிய வழிகள்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைக்க எளிய வழிகள்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைப்பதற்கு இந்த வழிமுறiயை பின்பற்றினாலேயே போதும், மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி அவஸ்தை படவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தற்போது நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கு அதிகளவு ஜங்க் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் காரணங்களாகக் கூறலாம்.
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இல்லாவிட்டால், அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய் வரும். அதுமட்டுமின்றி புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது.

உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மாத்திரை போட்டு அலுத்து போயிருந்தால், அதற்கு நல்ல தீர்வு அளிக்கும் ஓர் இயற்கை வழி ஒன்று உள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இஞ்சி

இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்
பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும்.

தேவையான பொருட்கள்:

பூண்டு – 4-5 பற்கள்

இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் கலந்துக் கொள்ள வேண்டும்
எப்போதும் சாப்பிட வேண்டும்?

இந்த மருந்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து காலை உணவு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், 2 வாரத்தில் கொலஸ்ட்ரால் குறைந்திருப்பதைக் காணலாம்.

Previous சக்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்து ஆவாரை
Next ரஷ்யாவில் குடியேறும் ரஜினி பட நாயகி

About author

You might also like

மருத்துவம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும், வெங்காயத்தின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்… வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே

மருத்துவம்

உஸ் இது பெண்களுக்கு மட்டும்…

அனைத்து பெண்களும் தங்களது தலை முடி தொடர்பில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர். சிறந்த உணவுப் பழக்க வழக்கங்களின் மூலம் தலை முடி வளர்ச்சியை சீராகப் பேண முடியும் என அய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.கூந்தல் வளர்ச்சியை தூண்டும் உணவுப் பொருள்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

மருத்துவம்

நீங்களும் குறட்டை பிரச்சினையில் அவதியுறுகின்றீர்களா?

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் பலரும் குறட்டை பிரச்சினையினால் ;அவதியுறுகின்றார்கள், இவர்களுக்கு எளிய வழியில் பிரச்சினையிலிருந்து விடுடபட தீர்வுகள் சில பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30