கமலின் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபலம்

கமலின் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபலம்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் திரைப்படத்தின் உரிமையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹே ராம் படத்தின் இந்தி மறுஉருவாக்க உரிமையை ஷாருக்கான் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஹே ராம்.
இந்திய அரசியல் வரலாற்றை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, அப்பாஸ், நாசர், கிரிஸ் கர்னாத், நசாருதீன் ஷா, சவுரப் சுக்லா, விக்ரம் கோக்லே, அரவிந்த் ஆகாஷ், வாலி, சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவான இந்த படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் இந்தி திரையரங்கு உரிமை ஷாருக்கானிடம் உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை இந்தியில் மறுஉருவாக்கம் செய்யும் உரிமையை ஷாருக்கான் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous கொல்லம் அஜத் காலமானார்
Next டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

You might also like

சினிமா

45 நாட்களில் படப்பிடிப்பை பூர்த்தி செய்த படக்குழு

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்னும் திரைப்படம் 45 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

சினிமா

பிரியா வாரியார் இந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கின்றாரா

புருவ அசைவு மூலம் பலரையும் கவர்ந்திழுத்த பிரியா வாரியார், பிரபல நடிகர் சித்தார்த்துடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் பிரியா வாரியார் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். ‘ஒரு அடார் லவ்’ படத்தில்

சினிமா

ஸ்ரேயா இரகசிய திருமண புகைப்படங்கள் அம்பலம்

பிரபல நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்களும், வீடியோயும் தற்போது வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்த