ஜிம்முக்கு செல்பவரா நீங்கள்? இதைக் கொஞ்சம் படியுங்கள்

ஜிம்முக்கு செல்பவரா நீங்கள்? இதைக் கொஞ்சம் படியுங்கள்

தினமும் ஜிம்மிற்கு சென்று உடல் பயிற்சி மேற்கொள்பவரான நீங்கள், அப்படியென்றால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.
ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
தங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் ஜிம்மிற்கு சென்று தான் உடலை குறைப்பேன் என செல்கிறார்கள். அவ்வாறு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைப்பது என்பது ஒரு நீண்ட பயணம். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். ஏனேனில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்பவருக்கே ஜிம் உடற்பயிற்சி சிறந்ததாகும்.

உங்கள் உடல் “கொழுப்பு சேமிக்கும் கிடங்காக” பல காலம் இருந்தபடியால், உடனே கொழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உடல் பயிற்சி செய்யத் தொடங்கிய சில வாரங்ககுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு உங்களுக்கு தோன்றலாம். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

ஜிம்மிற்கு சென்று பல பயிற்சிகளை செய்வேன், ஆனால் பிடித்த உணவுபண்டங்களை சாப்பிடுவேன் என்று நினைத்தால், அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடற்பயிற்சியும், சரியான டயட்டும் மிக முக்கியமானது.

பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய உண்டாக்க வாய்ப்புகள் உண்டு.

Previous ஹீரோவாகின்றார் பிரபல இயக்குநரின் மகன்
Next பக்கவாத நோயைத் தடுக்க இந்த உணவு போதும்

You might also like

மருத்துவம்

வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமின் டி உடலின் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒர் உயிர்ச்சத்தாகும். வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். வைட்டமின்

மருத்துவம்

குங்கும பூ யாரெல்லாம் சாப்பிடலாம்.!? கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா கூடாதா .!? குங்கும பூ ஆபத்தா. !? படியுங்கள்…!

கறுப்பாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தாயிடம் கேட்கும் முதல் கேள்வி “குங்கும பூ சாப்பிட்டு சரி என்னை வெள்ளையாக பெற்று இருக்கலாம் தானே”? நிஜத்தில் குங்கும பூ சாப்பிட்டால் வெள்ளையாக வருவார்களா? குங்கும பூ ஏன் சாப்பிடுகிறார்கள் சாப்பிட்டால் ஆபத்தா.? தெரிந்துகொள்வோம்

மருத்துவம்

சிகப்பு கொய்யப்பழம் கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு உதவுகின்றது

சிகப்பு கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பழ வகையாகும், இந்த பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்குத்தெரியுமா, வாருங்கள் அறிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் சிவப்பு கொய்யா தடுக் கிறது. கர்ப்பிணிகளுக்குத்