40 ஆண்டுகளின் பின்னர் சவூதியில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன

40 ஆண்டுகளின் பின்னர் சவூதியில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன

40 ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.

ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.

சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous பக்கவாத நோயைத் தடுக்க இந்த உணவு போதும்
Next வெங்காயத் தோலின் மகத்துவம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது

பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெரியந்துள்ளது. பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்தும் போது அதில் காப்படும் ரசாயன துகள்கள் கலந்து விடுவதாகவும் இதனால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமொன்று

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த தகவல்கள் களவாடப்படுவதனை தடுப்பது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை

டீக்கடை டிப்ஸ்

பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!

படித்ததில் வலித்தது . பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை உங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு யோனியும் மட்டும் தான் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது உணர்ச்சி வசப்பட்டு கூட உங்களால் எங்களையொரு குழந்தையாக பார்க்கமுடியாது போன பின்