ஆண்மையை விருத்தி செய்யும் நீர்முள்ளி

ஆண்மையை விருத்தி செய்யும் நீர்முள்ளி

ஆண்மைக் குறைபாடு உடையவர்கள் நீர்முள்ளிச் செடி விதைகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மூலிகைகள் என்பது பெரும்பாலும் செடிகளாகவே இருக்கின்றன. அதனுடைய பூக்கள், கனிகள், விதை, தண்டு, இலை, வேர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.

மூலிகைகள் என்பது பெரும்பாலும் செடிகளாகவே இருக்கின்றன. அதனுடைய பூக்கள், கனிகள், விதை, தண்டு, இலை, வேர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அவை நம்மை நலமுடன் வைத்திருக்கிறது.

அதில் மிக முக்கியமான ஒன்றுதான் நீர்முள்ளிச்செடி. அதிலும் இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. கண்ட க்ரீமையும் பயன்படுத்தாமல் இதுபோன்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தலாமே.
நீர்முள்ளிச் செடி

வாய்க்கால், சிற்றோடை போன்ற நீர்நிறைந்த இடங்களில் தானேவளரும் வல்லாரை, ஆரை போன்ற மூலிகைகள் எல்லாம் தனிச்சிறப்புமிக்கவை, அதைப்போல நீர்நிலைகளின் கரைகளில் வளரும் மற்றொரு அதிசய மூலிகைதான், நீர்முள்ளி. சாதாரண செடிபோல நீண்டு காணப்படும் நீர்முள்ளிச்செடி, குறுகலான வடிவம் கொண்ட இலைகளுடன், கருஞ்சிவப்பு வண்ண மலர்களுடன், தண்டுகளில் கூரான முட்களுடன் காணப்படும்.
மருத்துவப் பயன்கள்

நீர்முள்ளிச்செடியின் விதைகளே, பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சுநீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, உடலுக்கு நன்மைகள் தரும் வைட்டமின் ஈ,அயன், புரதம் மற்றும் தனிமங்கள் நிறைந்த நீர்முள்ளி விதைகள், பெண்களின் பெரும்பாதிப்பாக விளங்கும் இரத்தச்சோகை, ஆண்களின் ஆண்மைக்குறைபாடு இவற்றைக்களையும், அதிக உடல்எடையால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் களைந்து, எடையைக் குறைக்க வைக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், கட்டிகளைக் கரைக்கும், அல்சர் எனும் வயிற்றுப் ண்ணை சரியாக்கும். மூட்டு வலியை குணமாக்கும், எலும்பு தசைகளை உறுதியாக்கி, உடலை வலுவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தந்து, கண் எரிச்சல், நீர்க்குத்தல் போன்ற சூட்டால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை குணமாக்கும்.

Previous சல்மான் கானுக்கு தண்டனை விதிக்கட்டமையினால் 600 கோடி ரூபா நட்டம்?
Next மணித்தியாலங்களில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு

You might also like

மருத்துவம்

சக்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்து ஆவாரை

அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். ஆவாரையின்

மருத்துவம்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைக்க எளிய வழிகள்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைப்பதற்கு இந்த வழிமுறiயை பின்பற்றினாலேயே போதும், மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி அவஸ்தை படவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தற்போது நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கு அதிகளவு ஜங்க் மற்றும்

மருத்துவம்

வாழைப் பழ தோலை இனி வீசி எறிய வேண்டாம்

வாழைப்பழம் ஓர் அற்புதமான பழம் என்பது எமக்கு தெரிந்ததேயாகும், எனினும் வாழைப்பழத் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதில்லை, வாருங்கள் இன்றைய தினம் அது பற்றி அறிந்து கொள்வோம். பொதுவாக நாம் வாழைப்பழம் சாப்பிடும் போது,