சாப்பிடும் போது இந்தப் பழக்கம் உடையவரா நீங்கள்

சாப்பிடும் போது இந்தப் பழக்கம் உடையவரா நீங்கள்

சாப்பிடும் போது இந்தப் பழக்கமுடையவர்களின் உடல் எடை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது என ஆய்கள் தெரியவந்துள்ளது.
வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேகமாகச் சாப்பிடுபவரா நீங்கள்?
கோழி கொறிப்பதைப் போல வேகவேகமாக உணவை விழுங்குவது சிலரின் வழக்கம். ஆனால் வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக, உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும், அதுதான் உடல்நலத்துக்கு நல்லது என்பார்கள். அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் 59 ஆயிரத்து 717 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இரண்டாம் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, சாப்பிடும் முறை, மதுப் பழக்கம், தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த விவரங்களை அலசியபோது, மெதுவாகச் சாப்பிடுபவர்களைவிட வேகமாகச் சாப்பிடுபவர்கள் குண்டாக இருப்பது தெரியவந்தது. ஆக, சாலைப் பயணத்தைப் போல சாப்பிடுவதிலும் நிதானம் வேணும்!

Previous நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் தோற்றம்...
Next தென் ஆபிரிக்க கிரிக்கட் வீரர் ரபாடா உபாதை காரணமாக பாதிப்பு

About author

You might also like

மருத்துவம்

வீட்டுக்குள் இந்த இலையில் ஒன்றை தினமும் எரியுங்கள்…! அதன் பின் பாருங்கள்..!

தற்போது நிறைய பேர் மன அழுத்தத்தினால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிகமான வேலைப்பளுவினால் எப்போதும் டென்சனுடனும், மன இறுக்கத்துடனுமே இருக்கின்றனர். எனவே தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக வார இறுதியில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். சிலர் ஸ்பா சென்று நன்கு மசாஜ் செய்து, உடலை

மருத்துவம்

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

இந்த காலத்தில் தடுக்கவும் ஒதுக்கவும் முடியாத ஒரே உணவு என்றால் அது கோழி கறி தான் . எல்லாருக்கும் பிடிக்கும் விசமாகிறது சாப்பிட வேண்டாம் என்றால் நீங்களோ நானோ தயாராக இல்லை . இந்த நிலையில் ஒட்டுமொத்த விஷமும் அதில் தான்

மருத்துவம்

அரச மரத்தின் அதிசயிக்க வைக்கும் மருத்துவ பலன்கள்..! படித்து பயன்பெறுங்கள் ..!

அரச மரம் இறை விருட்சம் என்று பலராலும் அறியப்பட்ட ஓர் மரம்..! இந்த மரம் வளரும் இடமே புன்னிய தலமாகவும் உள்ளது .இலங்கையில் அரச மரத்தை வெட்டவும் தடை . காரணம் அதன் பலன்கள் தான். அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும்