பிரியா வாரியார் இந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கின்றாரா

பிரியா வாரியார் இந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கின்றாரா

புருவ அசைவு மூலம் பலரையும் கவர்ந்திழுத்த பிரியா வாரியார், பிரபல நடிகர் சித்தார்த்துடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் பிரியா வாரியார் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

‘ஒரு அடார் லவ்’ படத்தில் உள்ள ‘மாணிக்ய மலராய பூ’ பாடலில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு, இந்திய ரசிகர்கள் அனைவரையும் இவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

பிரியா நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்குள் மலையாளம், இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா வாரியருடன் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டுள்ளார். முதன் முதலாக சித்தார்த் மலையாளத்தில் நடித்துள்ள ‘கம்மார சம்பவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற போது பிரியா வாரியரை சந்தித்து செல்பி எடுத்து இருக்கிறார்.

சித்தார்த்-பிரியா வாரியரின் சந்திப்பு யதார்த்தமாக நடந்ததா? அல்லது தனது படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக பிரியாவை சித்தார்த் சந்தித்தாரா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. என்றாலும், இந்த படத்தை வெளியிட்டதால் சித்தார்த் படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

Previous பிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல ஹீரோ
Next இந்தப் பிரபலங்களையே சிவகார்த்திகேயன் பின்பற்றுகின்றார்?

About author

You might also like

சினிமா

உலக அழகி ஐஸ்வர்யாராய் சினிமாவுக்கு வந்து எத்தனை வருடங்கள் தெரியுமா ?

இந்தியாவின் அழகு தேவதையாக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி எத்தனை ஆண்டுகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நடிகை ஐஸ்வர்யாராய் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதற்கு நடிகை ரேகா கடிதம் எழுதி வாழ்த்தியது இந்தி பட உலகில்

சினிமா

நடிகர் அஜித் யாருக்கும் தெரியாது ஈழத் தமிழ் மக்களுக்கு செய்த செயல் …! 13வருடங்களின் பின் வெளிவந்ததால் அதிர்ச்சி

சினிமாவில் உள்ள ஒருசிலர் ஒரு சிறிய உதவியை செய்தால் கூட அதை வெளிச்சம் போட்டி காட்டி விளம்பரம் செய்து வரும் நிலையில் தல அஜித் எண்ணற்ற பல உதவிகளை எந்தவித விளம்பரமும் இன்றி செய்து வருகிறார். அவர் செய்த உதவிகள், உதவி

சினிமா

கன்னட மக்களின் அமோக வரவேற்பை பெற்றுக் கொண்டுள்ள தமிழ் ஹீரோ

தமிழ் ஹீரோ ஒருவரை கன்னட மக்கள் போற்றிப் புகழும் நிலைமை உருவாகியுள்ளது. நடிகர் சிம்புவின் கருத்துக்கு கன்னடர்கள் மத்தியில் அமோக வரவேற்பு தமிழர்களுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கியுள்ளனர். காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக மக்களின் தேவைக்கு போக, மீதமுள்ள தண்ணீரை