பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

ஆச்சரியம் ஆனால் உண்மை, விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் ஓரியன் ஸ்பேன் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பூமிக்கு வெளியே விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக சொகுசு ஹோட்டல் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு அரோரா ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி, 2021-ம் ஆண்டு நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்த ஹோட்டலில் 2022-ல் இருந்து மக்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும். இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ”ஓரியன் ஸ்பேன்” நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்பட உள்ளது.

இதில் 6 பயணிகள் மற்றும் 2 அதிகாரிகள் ஒரே சமயத்தில் தங்க முடியும். இதில் படங்களில் காட்டுவது போல மிதந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பூமியில் இருக்கும் பகுதி போலவே இதில் செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் இங்கு தங்கும் நபர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தேவை இல்லை.

பூமியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது. இதற்கான புக்கிங் எப்போது தொடங்கும் என்றும், இதற்கான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை.

இதற்கான கட்டுமான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை என்றாலும், 12 நாட்கள் இந்த ஹோட்டலில் தங்க இந்திய மதிப்பில் 61 கோடி ரூபாய் செலவு ஆகும். ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும். மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்து செல்ல வாங்கும் தொகையை விட இது குறைவு என கூறப்படுகிறது.

Previous தென் ஆபிரிக்க கிரிக்கட் வீரர் ரபாடா உபாதை காரணமாக பாதிப்பு
Next உடல் எடை அதிகரிப்பு புற்று நோயை ஏற்படுத்தக் கூடும்

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

கொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…!

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி யாக இருக்க ஆசை தான் அதிலும் கணவன் மனைவி மகிழ்ச்சி தான் முக்கியம் . குடும்ப வாழ்க்கை தான் ..! காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில்

டீக்கடை டிப்ஸ்

வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்க இந்த செயலி உதவுகின்றதா?

வாட்ஸ்அப்பில் நாம் செய்யும் உரையாடல்களை உளவு பார்ப்பதற்கு சாட்வாட்ச் என்னும் செயலி பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சாட்வாட்ச் எனும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்

டீக்கடை டிப்ஸ்

சிறுவர்கள் பாவிக்கும் கணிணி அல்லது தொலைப்பேசியில் ஆபாச இணைய தளங்களை block செய்வது எப்படி..? பெற்றோரே இது உங்களுக்கானது படித்து பகிருங்கள்…!

கணிணி அல்லது தொலைபேசி இன்றி இந்த காலத்தில் யாரும் இல்லை என்று சொல்லலாம் . அந்த அளவு தொழில்நுட்பம் முன்னோக்கி செல்கிறது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்து உண்டாகின்றது. குறிப்பாக கணிணி & தொலைப்பேசி