உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

இந்தயிhவின் பெங்களூரில் உயிருடன் மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை டாக்டர்கள் போராடி காப்பாற்றி உள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த சிறிய மீனை எடுத்து வாயில் விழுங்கியது. மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

இதனால் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. உடனே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் சோதித்த போது குழந்தையின் தொண்டையில் இருந்த மீன் வயிற்றுக்குள் சென்று உயிருடன் துடித்து கொண்டு இருப்பது தெரிந்தது. உடனே குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

குழந்தையை காப்பாற்ற மீனை வெளியே எடுக்க எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என ஆலோசித்தனர். பின்னர் என்டோஸ் கோபி மூலம் வயிற்றில் உயிருடன் இருந்த மீனை இரண்டாக வெட்டி வெளியே எடுத்தனர்.

இதனால் குழந்தை உயிர் பிழைத்தது. இதுபற்றி குழந்தையின் தந்தை கூறுகையில், எனது மகன் நாற்காலியை பிடித்தப்படி மீன் தொட்டியில் இருந்து சிறிய மீனை எடுத்து விழுங்கி விட்டான். குழந்தை துடிப்பதை பார்த்து உறவினர் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் போராடி குழந்தையை காப்பாற்றி விட்டனர் என்றார்.

இதுதொடர்பாக பெங்களூரில் நடந்த தேசிய குழந்தைகள் அவசர மருத்துவ மாநாட்டில் அறிக்கை அழிக்கப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரேஷ்மி கூறியதாவது:-

குழந்தைகள் ஏதாவது பொருளை விழுங்கி அவசர சிகிச்சைக்கு வருவது வழக்கம். ஆனால் உயிருள்ள மீனை விழுங்கியது சாதாரணமானது அல்ல என்று கூறினார்.

மாநாட்டில் குழந்தையை காப்பாற்ற அளித்த சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Previous உடல் எடை அதிகரிப்பு புற்று நோயை ஏற்படுத்தக் கூடும்
Next நடிகை ஷிவானியின் மெய்யான ஹீரோ யார் தெரியுமா?

You might also like

டீக்கடை டிப்ஸ்

துபாயில் மோசடியில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறைத்தண்டனை

துபாயில் நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று இந்தியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கோவாவின் வடக்கு பகுதியில்

டீக்கடை டிப்ஸ்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன்

டீக்கடை டிப்ஸ்

பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச் நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்செச் நிறுவனத்தின் விற்பனை