துபாயில் இந்தியருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்
April 8, 2018 138 Views

துபாயில் இந்தியருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

துபாயில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்தியர் ஒருவருக்கு 20 கோடி இந்தியா ரூபா மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.
துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் வென்ற இந்தியர் இந்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜான் வர்கீஸ், துபாய் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை இவர் வாங்கி இருந்தார். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 1.2 கோடி திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 20 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 691 ரூபாய்) கிடைத்துள்ளது.

இந்த தொகையை தனது நான்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் முட்டாள்கள் தினம் முடிந்தது. அதனால் என் நண்பர்கள் யாரோ என்னை ஏமாற்றுகிறார்கள் என முதலில் நினைத்தேன். அது தவறான அழைப்பாக இருக்குமோ என கூட சந்தேகப்பட்டேன்.

அது உறுதிபடுத்தப்பட்ட பின்னரும் கேரளாவில் உள்ள எனது குடும்பத்தினரிடம் பேச சிறிது நேரம் எடுத்து கொண்டேன். இது புதிய அனுபவமாக உள்ளது. எனது சிறிய குடும்பத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர்காலத்திற்காக இந்த பணத்தை உபயோகிப்பேன். கல்வியில் பயன்படுத்துவதை விட வேறு நல்ல வழி இருக்கும் என நினைக்கவில்லை. ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்துவேன் என அவர் கூறினார்.

Previous மத்திய அரசாங்கத்தை எச்சரிக்கும் நடிகர் ரஜினி
Next இந்த வகை உணவுகளில் இவ்வளவு ஆபத்தா?

You might also like

டீக்கடை டிப்ஸ்

இறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில்

டீக்கடை டிப்ஸ்

132 ஆண்டுகள் பழமையான போத்தலில் அடைக்கப்பட்ட செய்தி

சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் வீசி எறிந்து, போத்தலில் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்கு அவுஸ்திரேலிய கரையோரப் பகுதியில் இந்த போத்தல் மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பின்தங்கிய கரையோரப் பகுதியில் டோன்யா இல்மான் என்ற பெண் இந்த

டீக்கடை டிப்ஸ்

உங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..?எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..!

பொதுவாகவே கையில் உள்ள ரேகையை வைத்து தான் ஒருவரின் எதிர்காலத்தை கணிப்பதர்கள் யோசியர்கள் . ரேகையில் எத்தனை விதமான ரேகைகள் இருக்கு தெரியுமா ? தெரிந்துகொள்வோமா.? இதை படியுங்கள்..! “நேரான ரேகை” உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது