சாமி2 படத்தில் வித்தியாசமான வேடத்தில் தோன்றும் பிரபல நடிகர்

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சாமி-2 படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் காட்டவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஹசாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளத நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் ஹரி காட்டவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான பாபி சிம்ஹாவின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே சாமி-2 படத்தில் ஒரு மாஸ் விருந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்னு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Previous இந்த நடிகருக்காக லண்டன் பயணம் செய்யும் ஹாரிஸ் ஜெயராஜ்
Next வெற்றிலை பற்றி நம்மில் பலருக்குத் தெரியாத விடயங்கள்...

About author

You might also like

சினிமா

ஆர்யாவிடம் சுசானாவின் மகன் வைத்த கோரிக்கை ..நிறைவேற்றுவாரா ஆர்யா..!

ஆர்யா திரைப்படங்களில் பிரபலமானதை விட இந்த நிகழ்ச்சியில் தான் பிரபலமானார் என்று சொல்லலாம் . எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஆர்யாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களும் ரசிகர்களிடம் பிரபலம் என்றே

சினிமா

கிரிக்கட்டை எதிர்க்கவில்லை – வைரமுத்து

கிரிக்கட்டை எதிர்க்கவில்லை எனவும், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் நடத்டதப்படுவதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நேரத்தில் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம் என்று

சினிமா

திருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…! எதற்காக தெரியுமா !?

திருமண பந்தம் ஒத்துப் போகாவிட்டால் இப்படி தான் புது புது பிரச்சனைகள் வரும். புதிதாக திருமணம் முடித்த கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார்.அதற்கான காரணம் தான் விசித்திரம் . நீங்களே பாருங்க.. இந்தியாவில் மனைவிக்கு தாடியிருப்பதாகவும், அவருக்கு ஆண் குரல் உள்ளதாகவும்