பெப்சி ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்

பெப்சி ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்

போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருவதால் வேலையில்லாமல் அவதிப்படும் பெப்சி ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் சினிமா முடங்கியுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பெப்சி சம்மேளத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலைநிறுத்தம், படப்பிடிப்பு ரத்து காரணமாக தங்களது அன்றாட பிழைப்பை நடத்த முடியாமல் சிலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் பள்ளி செலவிற்கு கூட பணமில்லாமல் சிலர் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், பெப்சி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல் தயாரிப்பாளர்கள் பலரும் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Previous வெற்றிலை பற்றி நம்மில் பலருக்குத் தெரியாத விடயங்கள்...
Next மலையாளப் பக்கம் தாவும் ஜீவா

About author

You might also like

சினிமா

பாலிவுட் நட்சத்திரம் ரஜினியைப் போன்றவர் – பிரபுதேவா

இந்த பாலிவுட் நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்றவர் என டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அவர் மீண்டும் சல்மான்கான் படத்தை இயக்குகிறார். “சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது

சினிமா

15 திரைபடதிற்கு மேல் தயாரித்து 70 திரைபடத்திற்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்..!

சினிமாவில் தொடரும் மரணங்கள் சற்று கவலையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது மனித இயல்பு தானே. இவரது மரணமும் அப்பிடி தான் . சினிமாவில் தொடரும் மரணங்கள் சற்று கவலையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது மனித இயல்பு தானே. இவரது மரணமும் அப்பிடி

உலகச் செய்தி

ஸ்ரீதேவி மட்டுமில்லை அவருக்கு முதல் பல நடிக நடிகைகள் குளியலறையில் மர்மமாக இறந்து இருக்கிறார்கள்..! யார் யார் தெரியுமா..?

இது வரை ஸ்ரீதேவி மட்டும் தான் குளியலறையில் மர்மமாக இறந்தார் என்று நம்பி இருந்த நாம் இதோ உண்மைகள் . எத்தனை ஸ்ரீதேவிக்களை இந்த குளியறை மர்மம் உயிர் பிரித்துள்ளது பாருங்கள்..! ஸ்ரீதேவி வாழ்நாள்: 13 ஆகஸ்ட் 1963 – 24