கிரிக்கட்டை எதிர்க்கவில்லை – வைரமுத்து

கிரிக்கட்டை எதிர்க்கவில்லை – வைரமுத்து

கிரிக்கட்டை எதிர்க்கவில்லை எனவும், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் நடத்டதப்படுவதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நேரத்தில் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால், ஐபிஎல் போட்டி வீரர்களுக்கும், போட்டி நடக்கும் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாசாலையைத் தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் பேசிய வைரமுத்து, ‘இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம். காவல்துறைக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழருக்கான போராட்டம்’ என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ‘நாங்கள் அனுமதி வாங்கி கொண்டுதான் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். எந்த கட்சியும் இல்லாமல், தமிழ் உணர்வோடு நாங்கள் போராடுகிறோம். ஐபிஎல் போட்டிக்கு எதிராக கண்ணியமான முறையில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்; போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் உள்ளே நுழைந்திருக்கலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous ஆண்களே உங்களது வயதை குறைத்துக் கொள்ள விருப்பமா?
Next அதிக நாட்கள் உயிர் வாழ்ந்து கின்னஸில் சாதனை படைத்த ஜப்பானியர்

You might also like

சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவின் வாகனம் களவாடப்பட்டதாக முறைப்பாடு

தென்னிந்திய சினிமாவில் புகழ்பூத்த இசைப்பாளராக ஜொலித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தனது கார் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது கைவசம் தற்போது

சினிமா

அமிதாப் பச்சனுக்காக பிரார்த்தனை செய்யும் ரஜினி

சுகவீனமுற்றுள்ள பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனுக்காக கடவுளை பிரார்த்தனை செய்வதாக சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்’ என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவில் தூக்கமில்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதால்

சினிமா

புதிய படம் பற்றிய செய்தி பொய்யானது – கார்த்தி

புதிய படம் பற்றிய செய்தி பொய்யானது என பிரபல நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி படத்தை அடுத்து கார்த்தி நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய செய்திக்கு அவர் மறுத்துள்ளார். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி