நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்கத் தடை

நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்கத் தடை

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு படங்களில் நடிக்க தடை விதித்து தெலுங்கு நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு நடிகைகளை அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இது பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கிய சேகர் கம்முலு பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி மறைமுகமாக குற்றம் சாட்டினார். இதை சேகர் கம்முலு மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்தார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க மறுத்ததை கண்டித்து ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்.

போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் காரசாரமாக விவாதித்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை ஸ்ரீரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு நடிகர் சங்கம் வழங்கிய அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனிமேல் நடிக்க மாட்டார்கள். தடையை மீறி யாரேனும் நடித்தால் அவர்களும் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் தேஜா கூறும்போது உறுப்பினர் அட்டை வழங்குவது நீண்டகால பணி. ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எங்களை அவர் மிரட்ட முடியாது என்று கூறினார். தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கையால் ஸ்ரீரெட்டி சினிமாவில் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. குடியிருந்த வீட்டின் உரிமையாளரும் தன்னிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளதாக ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Previous சிறுநீரகக் கற்களை கரைக்கும் அற்புத வழி
Next ரன்வீர் சிங்கிற்கு தாத சாகேப் பால்கே விருது

About author

You might also like

சினிமா

தேசிய விருது வென்ற நடிகை மன வேதனையில்…

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வில் விருது வென்ற நடிகை பார்வதி தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீர் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய விருது கிடைத்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை ‘வெட்கப்படுகிறேன்’ என்று நடிகை பார்வதி

சினிமா

கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ஒட்டும் நடிகர் சிம்பு ..! யாருக்கு தெரியுமா..? ரசிகர்கள் சிம்புவை நேசிக்க இது தான் காரணம்..!

கிசுகிசு மட்டும் இல்லை எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் சினிமாவில் இருக்கும் ஒரே ஹீரோ அப்பிடி என்றால் நம்ம சிம்புவ சொல்லலாம் .ஆனால் சிம்பு எதை செய்தாலும் வெறுக்கும் ரசிகர்கள் குறைவே காரணம் அவரது இளகிய மனம் . சிறு வயதில் இருந்தே திரையில்

சினிமா

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக வித்தியாபாலன்

அண்மையில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக பிரபல நடிகை வித்தியாபாலன் நடிக்க உள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில்