பொடுகு தொல்லையை தீர்க்கும் பாட்டி வைத்தியம்

பொடுகு தொல்லையை தீர்க்கும் பாட்டி வைத்தியம்

விரும்பிய நிறத்தில் ஆடையணிந்து செல்வதற்கு நம்மில் பலர் தயக்கம் காட்டுவதற்கு பொடுகுத் தொல்லையும் ஓர் பிரதான காரணியாகும், இவ்வாறு தொல்லை தரும் பொடுகினை நீக்குதவற்கு எளிய பாட்டி வைத்தியத் தகவல்கள் இதோ…
பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகு தொல்லையை போக்கும் எளிய பாட்டி வைத்தியத்தை பார்க்கலாம்.
பொடுகு தொல்லையா? அசர வைக்கும் பாட்டி வைத்தியம்
பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவைகள் எவையும் நம் கூந்தல் வளர்ச்சியை பாதிக்காது.

பாலுடன் வால் மிளகு பவுடரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாகிவிடும்.

பசலைக் கீரை பூஞ்சை தொற்றை அழிக்கக் கூடியது. பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்கவும். இந்த கலவையை கூந்தலின் அடிப்பாகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இது நல்ல பலன் தரக் கூடியது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் 15 நிமிடம் இருந்தால் போதுமானது.

யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு துண்டை சூடான நீரில் நனைத்து பிழிந்து தலையில் கட்டவும். அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு காணாமல் போகும்.

Previous போலீசார் மீது தாக்குதல் நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ரஜினி
Next உங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது

You might also like

மருத்துவம்

ஆண்மை குறைப்பாட்டை நீக்கி உங்களை அதிசயிக்க வைக்கும் இலகுவான வழி முறை இதோ..!

பெண்களின் வலிகள் பல அதில் முக்கியமாக மலட்டுத் தன்மை என்பது உயிர் போகும் வலி..! இதற்கு என்ன செய்யலாம் இலகுவாக வழி முறைகள் இருக்கிறது இவற்றை பின் பற்றி சிறந்த தம்பதிகளாகவும் தாய்மையோடும் வாழ எங்கள் பிராத்தனைகளும் ..! பூசணிக்காயில் மருத்துவக்

மருத்துவம்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிப்பதற்கு வழிகோலும் என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறு பிராயத்தில் போதியளவு உறக்கமின்றி அல்லலுறும் சிறுவர் சிறுமியரின் உடல் பருமணடைவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உறக்கத்திற்கும் உடல் எடை அதிகரிப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறு

மருத்துவம்

பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து

பெண்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகினற்னர். பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடி;ககைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். பெண்கள் மாரடைப்பினால் பாதிக்கப்படக்கூடிய அறிகுறிகள்…