எல்லை மீறி நடிப்பது கிடையாது – சாய்பல்லவி

எல்லை மீறி நடிப்பது கிடையாது – சாய்பல்லவி

எந்த சந்தர்ப்பத்திலும் எல்லை மீறி நடிப்பது கிடையாது என பிரபல ஹீரோயின் சாய் பல்லி தெரிவித்துள்ளார்.
பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது சூர்யா, தனு{டன் நடித்து வரும் சாய் பல்லவி, எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன், எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. தமிழ் தெலுங்கில் தற்போது ‘பிசி’யாக நடித்து வருகிறார். தெலுங்கில் ‘பிடா’, ‘எம்.சி.ஏ’ படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சர்வானந்தாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடைய சம்பளம் ஒன்றரை கோடி என்று செய்திகள் வெளியாகின.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள ‘கரு’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். இதையடுத்து, சூர்யாவுடன் ‘என்ஜிகே’, தனுசுடன் ‘மாரி-2’ படங்களில் நடிக்கிறார்.

சாய் பல்லவி தனக்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது இல்லை. திரைத்துறையில் தனக்கு என்று ஒரு பாணியை கடை பிடிக்கிறார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சாய்பல்லவி அளித்த பேட்டி…

“சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன்”.

Previous துபாயில் மோசடியில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறைத்தண்டனை
Next இந்திய பிரதமரிடம் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைக்கும் தமிழக பிரபலம்

You might also like

சினிமா

வயிற்றில் வளர்ந்த குழந்தையை கரு கலைப்பு செய்த மைனா நந்தினி..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..! சிக்கியது ஓடியோ ஆதாரம் ..!?

நடிகைகளின் வாழ்க்கை எப்போதுமே கேள்விக் குறியானதே..திருமணம் செய்யாது சிலரும் திருமணம் செய்து நிம்மதி இன்று பலரும் இருக்கின்றனர் .. பிரிவுகள் மரணங்கள் என்று முடிவின்றி தொடர்ந்துகொண்டே இருக்கின்றது இந்த நிலையில் தான் மைனா நந்தினியின் கணவர் கர்த்திக் கின் மரணம் நிகழ்ந்தது

சினிமா

சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

சினிமா

என்னை படுக்கைக்கு அழைத்தால்…..! பிரபல இளம் நடிகையின் அதிரடி பேட்டி..!

நடிகைகளை தொடரும் துயரத்திற்கு பிரபல நடிகையின் அதிரடி பேட்டி வைரலாகி வருகிறது ஒவ்வொரு பெண்ணும் இப்படி இருந்தால் போதும் எவனும் தொட மாட்டான் ..! தெலுங்கு திரையுலகில், நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், தன்னை யாராவது