துபாயில் மோசடியில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறைத்தண்டனை

துபாயில் மோசடியில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறைத்தண்டனை

துபாயில் நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று இந்தியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை முதலீடு செய்து வந்தால் 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்தனர்.

அவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் இதில் அடங்குவார்கள். முதலில் சொன்னபடி குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனம் திருப்பி தந்தது. அதன்பின்னர், நாளடைவில் அவர்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீடு செய்தவர்கள், தங்களது பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, லிமோஸ், ரியான் டிசோசா உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிபதி, நிதி நிறுவனத்தின் உரிமையாளரான லிமோஸ், வாலனி மற்றும் டிசோசாவிற்கு 517 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே, 2015-ம் ஆண்டு கோவாவில் நடந்த கால்பந்து போட்டியில் முக்கிய விளம்பரதாரராக லிமோஸின் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous பாகிஸ்தானில் கர்ப்பிணி பாடகி மீது துப்பாக்கிச் சூடு
Next எல்லை மீறி நடிப்பது கிடையாது – சாய்பல்லவி

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர்

டீக்கடை டிப்ஸ்

இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

பல நாடுகள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துவதில்லை எனினும் சில நாடுகளின் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் மிகுந்த கரிசனை காண்பித்துக்கொள்ளும். அந்த வகையில் தென்கொரிய அரசாங்கம் பணியாளாகளின் நலனை உறுதி செய்ய புதிய சட்டமொன்றை

டீக்கடை டிப்ஸ்

வீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா..? உடனடியாக இவற்றை அகற்றுங்கள்..! பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..!

வீட்டில் வரவு அதிகமாக இருக்கும் ஆனால் செலவு அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் எவ்வளவு சேர்த்தாலும் சில நிமிடங்களிலயே தீர்ந்து விடும் . ஒரு நாள் வேலைக்கு செல்லாவிட்டால் கூட வீட்டில் ஒரு ரூபாய் இல்லாது போய் விடும் இதற்கான