சோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு

சோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு

சோமாலியாவவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து ரசிகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின்மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Previous அதிகளவில் வெள்ளைப்பூண்டு உட்கொள்வதால் ஏற்படக்கூடிய
Next இறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்...

About author

You might also like

நிமிடச் செய்திகள்

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி

துபாய்: இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. துபாய் இந்திய துணை தூதரகத்தில் ‘ஓபன் ஹவுஸ்’ எனப்படும் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல்

நிமிடச் செய்திகள்

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு காலத் தடை

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மற்றும் உதவித் தலைவராக செயற்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 19-06-2018, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 06.41 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.45 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.45