வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமின் டி உடலின் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒர் உயிர்ச்சத்தாகும். வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றுக்குத் தடை போடக்கூடியது இது.

வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின் ஆகும். மற்ற வைட்டமின்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இது. மேலும் இந்த வைட்டமின் இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படக்கூடியது.

சரி, அன்றாடம் போதுமான அளவு ‘வைட்டமின் டி’யை பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?

அதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில், வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை முக்கியமானவை.

எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? ரத்தப் பரிசோதனையின் மூலம் மட்டுமே இக்குறைபாட்டைக் கண்டறிய முடியும்.

வைட்டமின் டி சத்து, மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சுப் பழச்சாறு, சோயா பால், மாட்டின் கல்லீரல், பாலாடைக் கட்டி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால் மட்டுமே எலும்புகளால் எளிதில் கால்சியத்தை உறிஞ்ச முடியும்.

ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அவர் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு, குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்துமா பிரச்சினை ஏற்படலாம். அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்குக் கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவதும் எலும்பு முறிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட நேரிடும்.

இதய நோய் மற்றும் ரத்த அழுத்தத்துக்கும் வைட்டமின் டி குறைபாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே இப்பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, தினமும் போதுமான வைட்டமின் டி கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமான விஷயம், உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தை உண்டாக்கும்.

Previous நடிகை மேக்னாவிற்கு விரைவில் திருமணம்
Next 8 வயது சிறுமியிடம் மன்னிப்பு கோரிய கமல்ஹாசன்

You might also like

மருத்துவம்

புகைப்பழகத்தினால் இவ்வாறான ஓர் ஆபத்தும் உண்டா?

புகைப் பிடிப்பவர்களுக்கு கேட்டல் திறன் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில்

மருத்துவம்

ஆண்மையை அதிகரிக்கப் பயன்படும் பப்பாளி விதை

ஆண்மையை அதிகரித்துக் கொள்வதற்கு பப்பாளி விதைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், வாழ்;க்கை முறைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆண்மை குறைவு ஏற்படுகின்றது. அதிகளவு செலவு செய்யாது, ஆண்மைப் பிரச்சினைக்கு மிகவும் எளிய

மருத்துவம்

விஞ்ஞானத்தை வியக்க வைத்த சிறு நீரக கற்களை உடனடியாக நீக்கும் இயற்கை மருந்து..! இப்படி செய்யுங்கள் போதும்..!

சிறு நீரக கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது சிறியவர் பெரியவர் என்றெல்லாம் கற்களுக்கு தெரியாது எல்லோருக்குமே அவஸ்தைதை கொடுத்து விட்டு கடந்து செல்கிறது ..! டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து பற்றிய பதிவு இது கோவையில் மூன்றாம்