விஷாலிடம் வேதனையைச் சொன்ன பிரபல இயக்குனர்

விஷாலிடம் வேதனையைச் சொன்ன பிரபல இயக்குனர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர், நடிகா விஷாலிடம் தனது வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.
ஜீவா, ஜெய் நடிப்பில் வெளியான கலகலப்பு 2 படம் வெற்றி பெற்றாலும், எந்த லாபமும் வரவில்லை என்று இயக்குனர், தயாரிப்பாளர் சுந்தர்.சி, விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘கலகலப்பு 2’. இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பட அதிபர்கள் நடத்திவரும் ஸ்டிரைக் காரணமாக புதுப்படங்கள் வெளியாகாததால், தொடர்ந்து 8 வாரத்திற்கும் மேலாக இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் எட்டு வாரத்திற்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றி பெற்ற கலகலப்பு 2 படத்தில் எனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்த லாபமும் வரவில்லை என்றும், வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே கொடுத்தார்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous புதிய படம் பற்றிய செய்தி பொய்யானது – கார்த்தி
Next ரஜிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து

About author

You might also like

சினிமா

நயன்தரா பற்றிய அதிர்ச்சித் தகவல்

பிரபல நடிகை நயன்தாரா பற்றிய அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுயள்ளது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்ய இருக்கும் நிலையில், முன்பு காதலித்து பிரிந்த பிரபுதேவாவும் நயன்தாராவும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலித்தனர்.

சினிமா

மிகவும் கேவலமானவர் அவர், நான் தப்பித்தேன்” முன்னாள் காதலரான பிரபல தமிழ் நடிகரை திட்டி தீர்த்த நடிகை சமந்தா…! இவரை தான்..!

தமிழ் சினிமாவில் திருமணம் ஆனாலும் சினிமா வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் நடிகை சமந்தா . திருமணத்திற்கு பிறகு தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி வருகிறது

சினிமா

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்