ஸ்ரீரெட்டி மீதான தடை நீக்கம்

ஸ்ரீரெட்டி மீதான தடை நீக்கம்

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீதான தடை, நடிகர் சங்கம் நீக்கிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி ஓட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையை அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய விவரங்களை விரைவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியிடுவேன் என கூறி இருந்தார்.

இதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்கம், ஸ்ரீரெட்டி நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்தது. மேலும், அவருடன் இனி யாரும் இணைந்து பணியாற்ற மாட்டார்கள் என்று அறிவித்தது.

தெலுங்கு நடிகர் சங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக ஐதாராபத்தில் உள்ள தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பு, ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் அவரை காவல்துறை கைது செய்தது.

இதனிடையே ’ஃபிடா’ பட இயக்குனரான சேகர் கம்முலா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி புகார் கூறினார். இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது.

இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை புகைப்படத்துடன் வெளியிட்ட அந்த நடிகை, தெலுங்கு சினிமாவின் முன்னணி கதையாசிரியர் மற்றும் இயக்குனரான வெங்கட் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி தெலுங்கானா தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் 4 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது தெலுங்கு பிலிம்சேம்பர், ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகார்கள் குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று 4 நாட்களில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளது. 20 பேர் கொண்ட இந்த குழுவில் 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நடிகை படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கிக்கொண்டுள்ளது. இதுப்பற்றி பேசிய அச்சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா, நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு தெலுங்கு பிலிம்சேம்பர் விசாரணைக்குழுவை அமைத்துள்ளதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்றும், நடிகை கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்தார்.

Previous ரஜினி கட்சி தொடங்க கால தாமதமாகுமா?
Next சிங்கமுத்துவின் புதிய அவதாரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா

About author

You might also like

சினிமா

அழகினால் அனைவரையும் கவர்ந்த நடிகை பிந்து மாதவியின் பரிதாப நிலை..! கவலையில் ரசிகர்கள்..! புகைப்படங்கள் இணைப்பு ..!

பிக் பாஸ் வீட்டில் பல நடிக நடிகைகள் வந்து போனார்கள் குறிப்பிட்ட சிலரே மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள் அதில் ஒருவர் பிந்து மாதவி ..! பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் இப்படி கேட்டுள்ளனர். பிக் பாஸ்

சினிமா

காவிரி பிரச்சினைக்கு கவிதை வரிகளில் எதிர்ப்பு

காவிரிப் பிரச்சினைக்கு கவிதை வரிகளில் கவிஞர் பா.விஜய் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு, தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு என்று கூறியிருக்கிறார். சூஊயரஎநசலஆயயெபநஅநவெடீழயசன காவிரி மேலாண்மை

சினிமா

விஜய் சேதுபதிக்கு எதிராக முறைப்பாடு?

பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.