தேசிய விருது வென்ற நடிகை மன வேதனையில்…

தேசிய விருது வென்ற நடிகை மன வேதனையில்…

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வில் விருது வென்ற நடிகை பார்வதி தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
காஷ்மீர் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய விருது கிடைத்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை ‘வெட்கப்படுகிறேன்’ என்று நடிகை பார்வதி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல விருது கிடைத்த பலரும் மகிழ்ச்சியும், விருதுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றியும் தெரிவித்து பேட்டி அளித்தனர்.

ஆனால் நடிகை பார்வதி இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார். தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பார்வதியின் டுவிட்டர் பதிவு குறித்த தகவல் வெளியானதும், பலரும் அவரது கருத்தை அறிந்து கொள்ள பார்வதியின் டுவிட்டர் பக்கத்தை திறந்து பார்த்தனர். அங்கு பார்வதி சில வாசகங்கள் அடங்கிய பிரசுரத்தை கையில் பிடித்த படி, காட்சி அளித்தார்.

அதில், நான் இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், காஷ்மீரில் கோவிலுக்குள் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் உண்ணா பாலியல் பலாத்கார சம்பவமும் அவமானமாக இருக்கிறது என்று எழுதப்பட்டிருந்தது.

தேசிய விருது கிடைத்ததில், மகிழ்ச்சி அடையாமல் நாட்டில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை பார்வதிக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகை பார்வதியைப் போல டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா, பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், பர்கான் அக்தர், அபிஷேக்பச்சன் ஆகியோரும் சமூக ஊடகங்கள் வழியாக இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சோனம்கபூர், அர்ஜூன் கபூர், ரன்வீர் ஷோரே, ரிச்சா சதா ஆகியோர் இச்சம்பவங்களில் தொடர்புடைய அரசியல்வாதிகளை விமர்சித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் கேரளாவில் இருந்து சமூக அவலங்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை பார்வதி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக அரசியலில் பரபரப்பு விமர்சனங்களை முன்வைக்கும் நடிகர் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார். இதுபோல தனுசுடன் மரியான் படத்திலும் நடித்துள்ளார்.

Previous புற்று நோயை தடுக்கும் அற்புத தேனீர்
Next பணத்திற்காக நான் பாடுவதில்லை – ஜேசுதாஸ்

About author

You might also like

சினிமா

நாடே நிர்வாணமாகிவிடும் எச்சரிக்கும் வைரமுத்து

விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாடே நிர்வாணமாகிவிடும் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை அமைவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு

சினிமா

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்?

பிரதமா நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று பாரதிராஜா

சினிமா

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால