ரசிகர்களை கொண்டாடும் பிரியா பவானி

ரசிகர்களை கொண்டாடும் பிரியா பவானி

ரசிகர்களே தம்மை இந்த அளவிற்கு வளர்த்து விட்டதாக நடிகை பிரியா பவானி தெரிவித்துள்ளார்.
மேயாத மான்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் பிரியா பவானி சங்கர், நான் சினிமாவில் வேகமாக வளர ரசிகர்கள் தான் முழு காரணம் என்று கூறியிருக்கிறார்.
டி.வி.சீரியல்களில் நடித்து கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ்பட நாயகி ஆனார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார்.

தற்போது, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடிக்கிறார். அடுத்து அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்த படங்களுக்குப் பிறகு இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி நடிக்க இருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

சினிமாவில் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகிறார்…

“எனது இந்த வளர்ச்சிக்கு காரணம் ரசிகர்கள் தான். நான் டி.வி. சீரியலில் நடித்த போதே எனக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். சினிமா வாய்ப்பு வந்த போது, டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்து பெரிய நடிகர் ஆன சிவகார்த்திகேயன் நினைவுக்கு வந்தார். அவரைப்போல் என்னாலும் முடியும் என்ற தைரியம் வந்தது.

இப்போது ரசிகர்கள் சினிமா, சின்னத்திரை என்று பிரித்து பார்ப்பது இல்லை. யார் நன்றாக நடித்தாலும் அவர்களை ரசிக்கிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். எனவே, நான் சினிமாவில் வேகமாக வளர ரசிகர்கள் தான் முழு காரணம்”

Previous பணத்திற்காக நான் பாடுவதில்லை – ஜேசுதாஸ்
Next மீண்டும் வெற்றி நடைபோடும் எம்.ஜி.ஆரின் படம்

About author

You might also like

சினிமா

சிறைபிடிக்கப் பட்ட பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் உயிருடன் இருக்கிறாரா.? என்னாயிற்று கதறி அழும் பிள்ளைகள் ..!

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் கலக்கிய வில்லன்களில் மன்சூர் அலிகானும் ஒருவர்.பின் அரசியலிலும் தடம் பதித்தார் . எதையும் வெளிப்படையாக பேசி தினமும் சர்ச்சையில் மாட்டும் இவர் .. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை கண்டித்து நடந்த போராட்டத்தில்

சினிமா

சித்திரை புத்தாண்டிலும் புதிய படங்கள் திரைக்கு வருவதில் சந்தேகம்

சித்திரை புத்தாண்டிலும் புதிய படங்கள் திரைக்கு வருவதில் சந்தேக நிலைமை நீடித்து வருகின்றது. கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து நடைபெற்று வரும் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வராததால் தமிழ் புத்தாண்டில் புதிய படங்கள் வெளியாவது கேள்விக்குறியாகி உள்ளது.

சினிமா

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு மருமகளாகும் பிரபல ஹீரோயின்

தென் இந்தியாவின் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் பிரபல ஹீரோயின் ஒருவர் அவருக்கு மருமகளாக நடிக்க உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மறைந்த