உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டா இந்தப் படம் உருவாகின்றது

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டா இந்தப் படம் உருவாகின்றது

தொரட்டி ன்ற திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இவ்வாறு திரைப்படம் உருவாகியுள்ளது.
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி.

கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஒரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாராயம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி.

இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு, மேலும் சோத்துமுட்டி. ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் செய்து வருகிறார். பி.மாரிமுத்து ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous பாடலாசிரியர் விவேக்கை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாஸ் ஹீரோ
Next இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்

About author

You might also like

சினிமா

முரட்டுத் தனம் – இருட்டு அறையில் முரட்டு குத்து..! இப்படியா ஷாக் ஆன திரையுலகம் ..!

கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர். அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில்

சினிமா

தமிழ் உணர்வு இல்லாதவர்களை கடுமையாக விமர்சனம் செய்த சத்யராஜ்

தமிழ் உணர்வு இல்லாதவர்களை நடிகர் சத்யராஜ் கடுமையாக சாடியுள்ளார். தமிழக திரைப்படக் கலைஞர்கள் நடத்திய மௌன போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப்போராட்டம் நடத்தப்பட்டது.

சினிமா

நடிகர் சரத்குமாரிடம் வேலை செய்த இவரால் வரலக்ஸ்மி சரத்குமாருக்கு பாலியல் துஷ்பிரயோகம்..!

பிரபல நடிகையும் பெண்களுக்காக போராடி வருபவருமான சரத்குமார் வரலக்ஸ்மி தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..! நடிகை வரலக்ஷ்மி தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அவர் தற்போது