காலா எப்போது வெளிவரும்?

காலா எப்போது வெளிவரும்?

ரஜினி ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் காலா திரைப்பட வெளியீடு தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றமை, ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம், தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். அதுபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்தது.

கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் படப்பிடிப்பு, பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்திருப்பதால் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் மாதம் ‘காலா’ என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous சுஷ்மிதாசென் விடுதலை
Next பாடலாசிரியர் விவேக்கை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாஸ் ஹீரோ

About author

You might also like

சினிமா

22 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய 22 லட்சம் ரூபா பணத்தை நடிகர் காத்திக் இன்னும் தரவில்லை என புகார்

கடந்த 22 வருடங்களுக்கு முன்பு தனது தயாரிப்பில் நடிப்பதற்காக நடிகர் கார்த்திக்கிற்கு 22 லட்சம் பணம் கொடுத்ததாகவும், இன்றுவரை அந்தப் பணத்தைத் திருப்பித்தரவில்லை என்றும் அந்தப் பணத்தை கார்த்திக்கிடம் இருந்து வாங்கித் தருமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்து

சினிமா

பிரியங்கா கர்ப்பத்திற்கு மா.கா.பா தான் காரணம்! – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் குடும்பங்கள்!

தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டாலே மக்களை ஆட்சி செய்வது சீரியல்கள் தான். அப்படி சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த தொலைக்காட்சிகள் பல. அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி புதிய புதியத்தொடர்களை மக்களிடையே அறிமுகபடுத்துவது வழக்கம். அது மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ

சினிமா

பிச்சை எடுக்கும் நடிகர் ஸ்ரீமன்..! என்னாகிற்று.!? ரசிகர்கள் ஷாக்..!

சில நடிகர்களை சினிமா வெறுத்தாலும் மக்கள் வெறுப்பதில்லை . அவர்களுக்கு சின்ன கஷ்டம் என்றால் கூட உடனே ஓடிச்சென்று என்று கேட்பார்கள்..! முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினால் துணை நடிகர்களின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும். அவர்களுக்கு பெரிதாக