தாம்பத்தியமும் தாரமும்..! திருமணமானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்..!
April 21, 2018 11890 Views

தாம்பத்தியமும் தாரமும்..! திருமணமானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்..!

அழகான ஒரு பதிவு..படித்ததில் பிடித்ததால் பகிர்கிறோம்..!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!

ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்!!!*

எழுபத்தைந்து வயதில்…..
ஆதரவு இன்றி நிக்குது மனசு…

நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….

என்
கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது
அவளை கொண்டாடி இருக்கலாம்….

அவள் சமையலை
ஒருமுறையாவது நான்
மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..

ஒரு நாளாவது
நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..

ஒரு நாளாவது
அவளுக்கு பதில் – நான்
அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..

ஒரு நாளாவது
TV யையும்,
Mobil லையும் அணைத்துவிட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்..

ஒரு நாளாவது
வேலை தளத்தின்
கோபத்தையும்
எரிச்சலையும் அங்கேயே
விட்டு விட்டு வந்து இருக்கலாம்…

ஒரு நாளாவது- என்
விடுமுறை நாட்களில் – அவளை
சினிமாவுக்கு அழைத்து
சென்று இருக்கலாம்..

ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி
இருக்கலாம்…

அவள் விரும்பி
கேட்காத போதும் – ஒரு புடவை
வாங்கி கொடுத்து
இருக்கலாம்.

ஒரு மாசமாவது− என்
முழு சம்பளப் பணத்தை
அவளிடமே கொடுத்து
இருக்கலாம்….

ஒரு நாளாவது
காலையில் அலாரத்தை
கொஞ்சம் அணைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்…

நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…

நீயும் வா
என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..

அவள்
உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது
விசாரித்து இருக்கலாம்…

அவள்
தன்னை கவனிப்பதை விடுத்து
பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு
நான் கொஞ்சம் – அவளை
கவனித்து இருக்கலாம்..

அவள்
நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்…

என்
தாயே!
தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்…

நீ
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்…

என்னை
தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை…

தேனீர் ஏதாவது
போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும்
சினம் வருது…

என் மனைவியே
உன்னை நான் தினமும்
கொண்டாடி இருக்க வேண்டும் …

நான் தவறுகள் இழைத்ததற்கு
என்னை நீ மன்னித்து விடு…

ஒரு முழப் பூவாவது
ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன்
நான்…

மூச்சு இழந்த – உன்
புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மனைவியே!
என்னை மன்னித்து விடு..

மீண்டும்
ஒரு பிறப்பு இருக்கும் என்றால்
நீயே என் மனைவியாய் வந்து விடு.
நான் உன்னை கொண்டாட வேண்டும்..

எழுபத்தைந்து வயதில்…..
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….

*உங்கள் மனைவியை தினமும்
நீங்கள் நேசியுங்கள்!!!*
*வாழ்க்கை வசந்தமாகும்!!!*
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!
Next வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இன்னோர் முகம் – பலரும் அறிந்திரா உண்மைகள்!

You might also like

நிமிடச் செய்திகள்

இந்தியாவில் பெற்றோரை ஏமாற்றி இரண்டு பெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு திருமணமும் செய்த விதம்..! நீங்களே பாருங்க..!

நாடு எங்கு போகுது பெண்கள் எங்க போறாங்க எல்லாமே புரியாத புதிராக தான் இருக்கிறது அட ஆமாங்க பெற்றோரை ஏமாற்றி இரண்டு பெண்கள் திருமணம் செய்திருக்கும் விதத்தை பாருங்கள் .. உத்திரபிரதேசத்தில் 20 வயது இளம்பெண் தனது காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக

நிமிடச் செய்திகள்

அவசரகாலச் சட்டம் நீக்கம

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். அத்துடன் நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியிலும் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. குறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம்

நிமிடச் செய்திகள்

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக புலம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா தமிழகத்தில் தஞ்சமைடைந்த ஏராளமான ஈழ அகதிகள் தாங்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பி வர ஆர்வம் காட்டுகின்றனர் இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்து பல