கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் களமிறக்கி பணம் சம்பாதித்த பிரபல கல்லூரி!?
April 21, 2018 6376 Views

கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் களமிறக்கி பணம் சம்பாதித்த பிரபல கல்லூரி!?

இன்றைய இந்தியாவின் முக்கிய செய்தியாகி இருப்பது நிர்மலா தான் . யார் இந்த நிர்மலா ? ஒரு பேராசிரியர் பேராசிரியராக இருந்துகொண்டு அவர் செய்த செயல்கள் தான் அறுவெருக்க வைக்கிறது ஆமாம் ..

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து,
விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமானது
இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது,
காமராஜர் பல்கலைக்கழக உதவு பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணை ஆரம்பமானது
இதற்க்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும்.
அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம்.
பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்தார்.

*பேராசியர் தலை மறைவு*
பேசியது
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்
செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் உள்ள சி.பி.சி. ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர்
பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்
செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு,
நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இது பற்றி விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே
அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது.
அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம்.

விசாரணையின் போது அவர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேராசிரியையை ஆசை வார்த்தை காட்டி தூண்டியவர்கள் பிடிபட்டால் கட்டாயம் சட்டத்தில் தண்டனை கிடைக்கலாம் இப்படி பட்டவர்களை நிச்சயம் தண்டித்தே ஆக வேண்டும் என் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இத்தனை அழகாக இருக்கும் இந்திய பெண் அடுத்தவள் கணவனுக்காக அமெரிக்காவில் செய்த அசிங்கமான வேலையை பாருங்கள்...!
Next வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 05.05.2018 சித்திரை 22, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 01.33 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.

நிமிடச் செய்திகள்

இவள் வாழ கூடாது..” இளம் பெண்ணை துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரன்..! வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

ஏன், எதற்காக இப்படி எல்லாம் நடக்குது ..? உண்மையில் நினைக்கும் போது உலகம் அழிந்து விடாதா என்று தோன்றுகிறது… கேரளாவில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த கணவர் இன்னும் தலைமறைமாக உள்ள நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

நிமிடச் செய்திகள்

ஜெனீவாவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

ஜெனீவாவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமு; என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரின் நேற்றைய (19) அமர்வில்