கொழுப்பை குறைக்க கொண்டைக்கடலை சாப்பிடுங்க

கொழுப்பை குறைக்க கொண்டைக்கடலை சாப்பிடுங்க

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம்.ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

பயன்கள்…

இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கொண்டைக்கடலை குழம்பு…

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.இதன்பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கிவிட்டு, வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட்டால் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

பயன்கள்…

இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.
இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.

Previous தமீழீழ வான்புலிகள்_உருவான_வரலாறு
Next பிரியங்கா கர்ப்பத்திற்கு மா.கா.பா தான் காரணம்! – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் குடும்பங்கள்!

You might also like

மருத்துவம்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிப்பதற்கு வழிகோலும் என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறு பிராயத்தில் போதியளவு உறக்கமின்றி அல்லலுறும் சிறுவர் சிறுமியரின் உடல் பருமணடைவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உறக்கத்திற்கும் உடல் எடை அதிகரிப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறு

மருத்துவம்

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? இத தினமும் காலையில ஒரு டம்ளர் குடிங்க…

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். எப்படி தினமும் குளித்து உடலின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப் போல் உடலின் உட்பகுதியையும் சுத்தம்

மருத்துவம்

பக்க விளைவு இல்லாத இயற்கை கருத்தடை மருந்துகள்

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அநேகம் பேர் இன்று, இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முன் குழந்தைகள் பிறப்பதை சற்று காலம் தள்ளிப் போடலாம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு