கோயிலில் இருக்கும் சாமிகூட இவனை மன்னிக்காது..! குழந்தைகளை விட்டு வைக்காத இவனை என்ன செய்யலாம்..!?
April 23, 2018 1757 Views

கோயிலில் இருக்கும் சாமிகூட இவனை மன்னிக்காது..! குழந்தைகளை விட்டு வைக்காத இவனை என்ன செய்யலாம்..!?

இப்படி பட்டவர்களை என்ன செய்வது என்று தான் தெரியவில்லை அடிச்சே கொல்லனும் ..மதங்களையும் கேவல படுத்தும் கொடூரன்கள்…

சென்னையில் கோவிலில் வைத்து மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கோவில் பூசாரியான உதயகுமார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளது.

பெற்றோர் விசாரித்த போது கோவில் பூசாரி தன்னை கிள்ளிவிட்டதாக கூறியதால் உஷாரடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர்.

பூசாரி தொடர்ச்சியாக சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொதுமக்களிடம் உதயகுமாரின் அத்துமீறலை கூறிய போது அவன் அதே பகுதியில் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி உதயகுமாரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பூசாரி உதயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அவசரச் சட்டம் இயற்றியுள்ள நிலையிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நடைபெற்று வருவது பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் ...! அதிர்ச்சியில் உறைந்துபோன தாய்...!
Next நடிகர் விஜயிடம் பயந்து நடுக்கிய தனுஷ்..! காரணம் என்ன தெரியுமா ..!?

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 21-05-2018, வைகாசி 07, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.24 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 09.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1.

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 20-04-2018, சித்திரை 07, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.14 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 26-04-2018, சித்திரை 13, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.20 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் பகல் 02.26 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 02.26 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2.