நாம் குடிக்கும் தண்ணீர் விசமாகிறது….எம்மை அறியாமலே மரணத்தை வரவழைத்து விடுகிறது. எப்போது தெரியுமா..?

நாம் குடிக்கும் தண்ணீர் விசமாகிறது….எம்மை அறியாமலே மரணத்தை வரவழைத்து விடுகிறது. எப்போது தெரியுமா..?

உணவு விசமாகும் அதே போல உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதும் ஆபத்தாம் ..கவனமாக இருக்க வேண்டுமாம் . எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான்.

ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன்? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை இந்த பதிவு விளக்குகிறது.
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, குடித்தால் உடலில் சத்துக்கள் ஒட்டாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும், அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும், அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை.
உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

இப்படி சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைப் பற்றி இருவேறு விதமாக பலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம், ஆனால் இதைப்பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது, அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்
நாம் பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள்.
அப்படி சாப்பிட்ட உடன் நீரை முழுவதுமாகக் குடிக்கக் கூடாது, குறைந்தபட்சம் சாப்பிட்டப்பின் இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது.
ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துக்கள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.
நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும்.

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும்.
அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும்
சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?’ என்பார்கள் சிலர்.

அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது, ஒரு மணிநேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை.
ஆனால், குறைவாகக் குடிப்பதால் தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன.
சாப்பிடுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம், சாப்பிட்ட பிறகும் அரை மணிநேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சிரித்து விளையாடிய குழந்தை உயிருக்கு போராடும் கொடூரம்..! நீங்களே பாருங்கள்..!
Next சித்திரா பௌர்ணமி சிறப்புகள்

About author

You might also like

மருத்துவம்

மூட்டுவாதம், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டுக்கு உடனடி தீர்வு இதோ…!

மூட்டு வாதம் நரம்பு தளர்ச்சி உட்பட அனைத்து நோய்க்கும் உடனடி நிவாரணி முடக்கத்தான்..! கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம் முடக்கத்தான் கீரை சூப் : தேவையானவை முடக்கத்தான்

மருத்துவம்

பீர் மூலம் இவ்வாறு எல்லாம் நன்மை அடைய முடியுமா?

பீர் அருந்துவது பொதுவாக கூடாத பழக்கங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றது, எனினும் பியர் அருந்துவதனால் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய நலன்கள் பற்றியே இந்தக் கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டுரையை வாசித்ததன் பின்னர் வானவில் எப்.எம். வாசகர்களான நீங்களும் பியரில் இத்தனை நன்மையா என

மருத்துவம்

இதயம் காக்கும் செம்பருத்தி

செம்பருத்தி பூக்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பின் போது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றேயாகும் எனினும், இந்தப் பூ எமது இருதயத்திற்கு எவ்வளவு நலன்களை வழங்குகின்றது என்பதனை இன்று நாம் அறிந்து கொள்வோம். செம்பருத்திப் பூ