அப்பாவி சிறுவனின் மரணத்தில் கனடாவின் செயல் ..! கனடாவா இப்படி என்ற அதிர்ச்சியில் மக்கள்..!

அப்பாவி சிறுவனின் மரணத்தில் கனடாவின் செயல் ..! கனடாவா இப்படி என்ற அதிர்ச்சியில் மக்கள்..!

கனடாவை எல்லாருக்கும் பிடிக்கும் அதற்கு காரணம் பிரதமர் என்று கூட சொல்லலாம்..ஆனால் அந்த நாட்டுல கூட நடுக்கிற இது போன்ற விடயம் நடக்கிறது என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு ..

உலகமக்கள் அனைவரது உள்ளத்தையும் உலுக்கிய சிரியாசிறுவன் அலன்குர்தியின் குடும்பத்திற்கு கனேடிய அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்த விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி உலகநாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஒரு புகைப்படம் உலுக்கியது.

துருக்கி கடற்கரையில் ஜீவனற்று கிடந்த சிறுவனின் புகைப்படந்தான்அது. அலன் குர்திஎன்ற அந்த சிரியாசிறுவனும் அவனது குடும்பத்தினரும் அகதியாகதஞ்சம் கோரி படகில் புறப்பட்ட நிலையில், படகு கவிழவே அதில் பலர் உயிரிழந்தனர், அதில் சிறுவன் அலன் குர்தியின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது.
கனடாவில் அப்போது தேர்தல் ஜுரம் உச்சியில் இருந்த காலகட்டம்.

அகதிகளாக தஞ்சம் கோரியவர்களுக்கு உரிய பதில் அளிக்க மறுத்து கனடா நிர்வாகம் மெத்தனம் காட்டியதாகவும், அதில் அலன்குர்தியின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனேடிய செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிரியாஅகதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை கொண்ட 532 பக்க ஆவணங்களை திரட்டிய கனேடிய செய்தி நிறுவனம், அதில் அகதிகள் மீது முந்தைய அரசின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.
சம்பவத்தன்று அலன்குர்தியின் புகைப்படம் உலகின் ஒட்டு மொத்த பத்திரிகையின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க, அந்த புகைப்படம் கனேடிய அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததும், உடனடியாக அரசாங்கத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டீபன் ஹார்ப்பரின் தலைமையிலான கன்சர்வேடிவ் அரசாங்கம் சிரியா அகதிகள் 10,000 பேருக்கு புகலிடம் தந்துள்ளதையும் முக்கியப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பில் செய்திநிறுவனங்கள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அதிகாரமையம் முறையாக பதிலளிக்கவும்மறுத்துள்ளது.

சமீபத்தில்சிறுவன் அலன்குர்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்றில், அலன் குரிதியின் புகைப்படம் எவ்வாறு அகதிகளிடம் உலகநாடுகளின் பார்வைமாறியது என்பதை விளக்கியுள்ளது.
இருப்பினும் கனேடிய அரசாங்கம் அலன் குர்தி விவகாரத்தில் திரைக்குபின்னால் ஒளிந்து கொண்டது என்றே சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போதை ட்ரூடியோ அரசாங்கம் இதுவரை 51,800 சிரியா அகதிகளை வரவேற்றுள்ளது அரசாங்க ஆவணங்களில் இருந்தே தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகள்எப்போதும் எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்வார்கள், ஆனால் செயலில் காட்டமாட்டார்கள்.
ஆனால் பொதுமக்கள் நாம் தான் நமது மெளனத்தை கலைத்து அரசாங்கத்தை தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டும் என சிறுவன் அலன் குர்தியின் உறவினர் டிமா குர்திதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஏலத்தில் பணம்கொடுத்து வாங்கப்படும் பெண்கள் ..! இதற்காக தானம் .. அதிர்ச்சி தகவல்...!
Next இன்னும் சுசி லீக்ஸ்..! அதிர்ச்சியில் சின்மயி...!

You might also like

நிமிடச் செய்திகள்

நாமல் ராஜபக்ஸ அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் உஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர்

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இவ்வார சுப முகூர்த்தநாட்கள் 06.05.2018 சித்திரை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷம் இலக்கினம். தேய்பிறை 07.05.2018 சித்திரை 24 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி

நிமிடச் செய்திகள்

மாணவிகள் முத்தம் கொடுத்தால் தான் புள்ளிகள்..! பொலீஸ் விசாரணையில் நிர்மலாதேவியின் பதிலால் அதிர்ந்த பொலீஸ்..!

இந்தியாவில் இப்போது பரவலாக மக்கள் பேசிக்கொண்டிருக்கும் விடயம் பேராசிரியர் நிர்மலா பற்றி தான். பொலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் தகவல்கள் ஒரு நிமிடம் உறைய வைக்கிறது என்று தான் சொல்ல முடியும் அந்த அளவு நடந்து இருக்கிறது . இதுவரை வெளிவராத