ஆஸ்துமாவின் அராஜகமும் …அதற்கான தீர்வும் ..! இதோ..

ஆஸ்துமாவின் அராஜகமும் …அதற்கான தீர்வும் ..! இதோ..

அன்றாடம் மனிதர்கள் ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப் படுகிறார்கள் ..சில நோய்கள் தானாகவே தேடிக்கொள்ள படுகின்றது ..இந்த இயந்திர உலகில் எப்போது நோய் ஒட்டிக் கொள்ளும் என்று அறியாமல் தான் நாமும் வாழ்கிறோம் அந்த வரிசையில் தான் ஆஸ்துமாவை நோய் என்று சொல்வதை விட நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லலாம்.

பரம்பரை காரணமும், ஒவ்வாமையும் ஆஸ்துமா வருவதற்கு முக்கிய காரணமாகிறது.
உணவு, உடை, தூசு, புகைப்பிடித்தல், தொழிற்சாலை கழிவுகள் என சுத்தமாக காற்றையே பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது என சொல்லலாம்.
எங்கு பார்த்தாலும் தூசு, மாசடைந்த காற்றையே நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இவையெல்லாம் தான் ஆஸ்துமா அதிகரிக்க காரணங்கள், நுரையீரல், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் நோய்த்தொற்று இருந்தால் ஆஸ்துமாவைத் துண்டும்.
அடுக்குத் தும்மல், மூக்கொழுகுவது, மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்காத போதும் ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.
தவிர்ப்பது எப்படி?
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது என்ற போதிலும், தடுக்க வழிமுறைகள் உள்ளன.

வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும்.
தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
சுவர்களில் படங்களை தொங்கவிட்டிருந்தால் அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிவிட வேண்டும்.
சுழல் விசிறிக்கு நேராக படுக்க கூடாது, வாசனை திரவியங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடாது.
பைக்கில் வெளியில் செல்பவராக இருந்தால் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.
வளர்ப்பு பிராணிகள், பூந்தோட்டங்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.
ஆயுர்வேத மருத்துவம்
தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும்.
முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்.

சிற்றரத்தையை உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச் சாற்றைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா மட்டுப்படும்.
கண்டங்கத்திரி செடியை வேருடன் எடுத்து, காய வைத்து, இடித்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
குழந்தைகளுக்கு, காக்கரட்டான் விதைகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்து 5 அரிசி எடை கொடுத்து வந்தால் ஆஸ்துமா குறையும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆர்யாவிடம் சுசானாவின் மகன் வைத்த கோரிக்கை ..நிறைவேற்றுவாரா ஆர்யா..!
Next நடிகர் அஜித்துக்கு வாழ்த்து நான் சொல்லவில்லை ..எனக்கு வேற வேலை இருக்கு ..! அமைச்சரின் பேச்சால் கடுப்பில் ரசிகர்கள்...!

About author

You might also like

மருத்துவம்

குங்கும பூ யாரெல்லாம் சாப்பிடலாம்.!? கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா கூடாதா .!? குங்கும பூ ஆபத்தா. !? படியுங்கள்…!

கறுப்பாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தாயிடம் கேட்கும் முதல் கேள்வி “குங்கும பூ சாப்பிட்டு சரி என்னை வெள்ளையாக பெற்று இருக்கலாம் தானே”? நிஜத்தில் குங்கும பூ சாப்பிட்டால் வெள்ளையாக வருவார்களா? குங்கும பூ ஏன் சாப்பிடுகிறார்கள் சாப்பிட்டால் ஆபத்தா.? தெரிந்துகொள்வோம்

மருத்துவம்

உடற் பயிற்சிகளின் அரசன் யார் தெரியுமா?

உடற் பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும், எனினும் எந்த உடற்பயிற்சி மிகவும் சிறந்தது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? உடற்பயிற்சிகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. நடைப்பயிற்சியை எப்படி ஆரம்பிக்க

மருத்துவம்

வேர்க்குரு பிரச்சனையா.? இதோ நிமிடத்தில் தீர்வு..!

வேர்க்குரு என்று சொல்லப் படும் வேர்வை பரு இல்லாமல் போக இதை செய்யுங்கள்..! வேர்க்குருவிற்கு கற்றாளை ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன்படுகிறது. சோற்றுகற்றாழையின் மேற்ப்பகுதியில் உள்ள தோலையும் முள்ளையும் நீக்கி விட்டு உள் பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து