இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
May 2, 2018 495 Views

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 03.05.2018 சித்திரை 20, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 09.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.51 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 07.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனியநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
ராசிபலன்
5/3/2018
மேஷம்
மேஷம்: இரவு 8.17 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சோர்வாக காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இரவு 8.17 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சாதிக்கும் நாள்.
கடகம்
கடகம்: வீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி
கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: இரவு 8.17 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து விலகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். இரவு 8.17 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
மகரம்
மகரம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுகிட்டும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கோடிகள் குவிக்கும் 4 வயது இந்திய சிறுவன்..! ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படியுங்கள் . !
Next அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்...!

You might also like

நிமிடச் செய்திகள்

கண்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கண்டி பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டஈட்டுத்தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலின் போது, கண்டி

நிமிடச் செய்திகள்

சிரியாவில் மீண்டும் நச்சு வாயுத் தாக்குதல்

சிரியாவில் மீண்டும் நச்சு வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரியாவின் கிழக்கு குவாத்தாவில் அரச படையினரின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அரச படையினர் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளோரின்

நிமிடச் செய்திகள்

சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர்