“நீட்”குடித்த இன்னொரு உயிர்…! அனிதாவை போல் இன்னொரு மாணவி துடிதுடித்து மரணம்..!
May 5, 2018 1249 Views

“நீட்”குடித்த இன்னொரு உயிர்…! அனிதாவை போல் இன்னொரு மாணவி துடிதுடித்து மரணம்..!

மனசாட்சி இல்லாத இந்திய அரசால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது… எத்தனை போராட்டங்கள் எதனையும் கண்டுகொள்வதாக இல்லை அரசு ..!

இந்த நேரத்தில் நீட் தேர்வால் அனிதாவை போல் இன்னொரு உயிரும் பலியாகி இருக்கிறது… புதுவை அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் (42). இவருடைய மனைவி சுசிலா இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிவசங்கரன் வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் டீ மற்றும் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவியும் கடையில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இவர்களுடைய மூத்த மகள் சிவசங்கிரி (17). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து விட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்தார். மாணவி சிவசங்கரி டாக்டர் ஆக வேண்டும் என்று எல்லோரிடமும் கூறி வந்த நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிவசங்கிரி தனது தங்கையுடன் நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார்.

திடீரென சிவசங்கரி நான் அறையில் சென்று படிக்கிறேன் என்று தங்கையிடம் கூறிவிட்டு அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். வெகு நேரமாக கதவை தட்டியும் சிவசங்கரி கதவை திறக்காமல் இருப்பதை அறிந்த தங்கை தந்தை சிவசங்கரனுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே வீட்டுக்கு வந்த சிவசங்கரன் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிவசங்கரி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவசங்கரன் மகள் சிவசங்கரியை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிவசங்கரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவி சிவசங்கரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next ஆலய வளாகத்தில் இறைச்சி (மாமிச) கழிவுகள்..அதிர்ச்சியில் மக்கள் ..!

You might also like

இந்தியச் செய்தி

அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி குழந்தை ..! இப்படியும் சில மிருகங்கள்..!

இரக்கம் அற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் தான் நிரூபித்து கொண்டிருக்கின்றது . அப்பாவி குழந்தையை கொள்வது எப்படி இது போன்ற மிருகங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை . இவர்களை முதலில் கொன்று புதைக்க வேண்டும் ..!

இந்தியச் செய்தி

23 வயது பெண்ணுக்கும் 13 வயது சிறுவனுக்கும் நடந்த திருமணம் ..! முதலிரவுக்கு சென்ற மணபெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!

காதல் எப்போ எப்படி வரும் என்று தெரியாது தான் அதுக்காக இப்படி காதல் வருமா.? இது காதலா? எங்க போகுது இந்த கால பிள்ளைகளின் வாழ்க்கை..? கேள்விகள் மட்டுமே இருக்கிறது பதிலை தான் தேடி அலைய வேண்டிய நிலை . கிடைக்கப்

இந்தியச் செய்தி

முனைவர் பட்டத்துக்காகவே மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்தியதாக கூறியுள்ளார் – பேராசிரியர் நிர்மலா தேவி

மாணவிகளை பாலியலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள மதுரையில் உள்ள பிரபல கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி மேற்படி கூறியுள்ளார் இதுகுறித்த விசாராணைகளின் போது இந்த செயல்பாட்டுக்கு மேலும் பல பேராசிரியர்கள் தனக்கு உதவியளித்ததாகவும் தெரிவித்துள்ளார் மேலும் ஒரு