இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
May 5, 2018 553 Views

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம்
06-05-2018, சித்திரை 23,
ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி
பகல் 03.55 வரை பின்பு தேய்பிறை
சப்தமி. உத்திராடம் நட்சத்திரம்
பின்இரவு 04.39 வரை பின்பு
திருவோணம். நாள் முழுவதும்
அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு
நல்லது . சுபமுகூர்த்த நாள். சகல
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற
நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷம்: பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். காலையில் குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் சற்று ஓய்வும் உற்சாகமும் கிடைக்கும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலை நேரத்து நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
ரிஷபம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். பிற்பகலுக்கு மேல் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
மிதுனம்: புதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையோ, முக்கிய முடிவு எடுப்பதையோ தவிர்க்கவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உறவினர்கள் சந்திப்பு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
சிம்மம்: தெய்வபக்தி அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதுடன், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
கன்னி: அனுகூலமான நாள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.
துலாம்: தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உறவினர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். விருச்சிகம்:அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.
தனுசு: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படக்கூடும். பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகக் கூடும்.
மகரம்: எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக் கூடும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். கும்பம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். எதிர்பாராத வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.
கும்பம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். எதிர்பாராத வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.
மீனம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். முக்கிய விஷயத்தில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர் களின் அறிமுகம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆண்மை குறைப்பாட்டை நீக்கி உங்களை அதிசயிக்க வைக்கும் இலகுவான வழி முறை இதோ..!
Next "நீட்"குடித்த இன்னொரு உயிர்...! அனிதாவை போல் இன்னொரு மாணவி துடிதுடித்து மரணம்..!

You might also like

நிமிடச் செய்திகள்

வளர்த்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்..! நடந்தது இது தான்..!

பொதுவாக நாய் நன்றி உள்ள மிருகம் .விசுவாசம் என்பதை நாயிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் .அப்படியான நாய் எப்படி சுடும் தன் முதலாளியை ..!? உங்களை போல தான் நானும் கேள்வி கேட்டேன் சரி நீங்களே பாருங்களேன் ..! அமெரிக்காவில்

நிமிடச் செய்திகள்

டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி

நிமிடச் செய்திகள்

திட்டமிட்டபடி திரைக்கு வருமா காலா

திட்டமிட்ட திகதியில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கான முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்; ‘காலா’ திரைப்படம் உருவாகியுள்ளது. திட்டமிட்டபடி திரைக்கு ‘கபாலி’ படத்தை அடுத்து பா.இரஞ்சித் டைரக்ஷனில், ரஜினிகாந்த் நடித்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பு, குரல்