கேவலமான செயலை செய்த  இளம் பிக்கு- எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டார்

கேவலமான செயலை செய்த இளம் பிக்கு- எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டார்

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த மொரவெவ பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியில் 17 வயதுடைய பிக்குவிடம் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளதுடன், அவரை கைது செய்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் பௌத்த பிக்குவை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், பெரிய பௌத்த பிக்குவை வரவழைத்து கைது செய்யப்பட்ட பிக்குவை எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுட்டால் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து குறித்த பிக்குவை விடுவித்துள்ளனர்.

அதே நேரம் வேற்று மத தலைவர் ஒருவர் இவ்வாறு கஞ்சாவுடன் சிக்கி இருந்தால் அவரையும் இவ்வாறு விடுவிப்பார்களா என பொலீசாரின் பக்கச்சார்பு நிலையை பற்றி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

Previous 18 வயதிற்கு பிறகு பெண்களால் எந்த வயது ஆணுடனும் முடியும்..! இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
Next நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

About author

You might also like

பரபரப்பு

சிகிச்சைக்காக வந்த பெண் சிதைக்கப்பட்டார் – ஹைதராபாத்

குடும்ப சண்டையில் கணவன் தாக்கியதால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை வார்ட் பாய் கற்பழித்துள்ள சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாவட்டம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்டு காயங்களுக்கு  சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளார் சிகிச்சைக்காக

பரபரப்பு

இணையத்தளம் பாவிக்கும் இலங்கையர்க்கு எச்சரிக்கை !

இணையத்தளங்கள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம் தொடர்பில்

பரபரப்பு

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ். திக்கித் திணறும் பொலீஸார்..!

எந்த பக்கம் திரும்பினாலும் போராட்டம் . வன்முறை கொலை கொள்ளை தான் இதை தவிர்த்து எதையுமே காண முடிவதில்லை ..பிரான்சிலும் அது தான் நடந்துள்ளது.. பிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அரசு