பெண்களுக்கு ஏற்படும் அந்த நோய்க்கு உடனடி இயற்கை தீர்வு இதோ..!

பெண்களுக்கு ஏற்படும் அந்த நோய்க்கு உடனடி இயற்கை தீர்வு இதோ..!

சிலருக்கு இந்த நோய் இருக்கும் ஆனால் கண்டுகொள்ள மாட்டாங்க ஆனால் இது கூட கொஞ்சம் ஆபத்தானது தான். கவனிக்காமல் விட்டால் பின் வரும் அதிகான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்…! அதற்காக தான் இயற்கை மருத்துவ முறைகள்..! .

பெண்களை மட்டுமே பாதிக்ககூடிய நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்று. உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம், சுகாதாரமற்ற உள்ளாடைகள், ரத்த சோகை, மன உளைச்சல், சுகாதாரமற்ற இடத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற பல காரணங்கள் இதற்காக சொல்லப்படுகின்றன.

இதனை கூச்சத்தின் காரணமாக பெண்கள் வெளியே சொல்லவோ மருத்துவரிடம் செல்லவோ யோசிப்பார்கள். ஆனால் இது தவறு.
உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால் பெண்களின் இனவிருத்தி உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் அவற்றை நீக்கவும் வேண்டி வரலாம்.

ஆகவே ஆரம்ப காலத்திலேயே கவனித்தல் நல்லது.
இரவில் சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீருடன் வெந்தயத்தையும் மென்று முழுங்க வேண்டும். இதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை கலந்து , அந்த நீரை வடித்துப் பருகி வரலாம்.
தண்டு கீரையின் தண்டுகளை மட்டும் எடுத்து வெந்நீரில் வேகவைத்து உப்பு போட்டு இந்த நீரை ஒரு நாளைக்கு இரு முறை குடித்து வர, வெள்ளைப்படுதல் குணமாகும்.

வெள்ளை படும் சமயங்களில் வெயில் நேரங்களில் தினமும் ஒரு கப் வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வர பலன் கிடைக்கும்.
அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகுவதால் உடல் சூடு குறைந்து வெள்ளைப்படுதல் நிற்கும்.
சோற்றுக் கற்றாழை ஜெல்லை கழுவி மோருடன் சேர்த்து அரைத்துக் குடிக்கவும் உடல் சூடு தணிந்து, ஒரே நாளில் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும்.

அதே போல இந்த ஜெல்லை நீருடன் அரைத்து, அந்த பகுதியில் பேக் போட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
சப்ஜாவிதைப் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து பருகி வந்தால் சரியாகும்.
வேப்பம்பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றாக அரைத்து வைத்து, இந்தப் பொடியில் கொஞ்சம் எடுத்து நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போல போட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவி விடவும் .
இதன் மூலம் அங்குள்ள கிருமிகள் அழிந்து விடும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல தொகுப்பாளினி விபத்தில் திடீர் மரணம்..! ஷாக் ஆன ரசிகர்கள். !
Next 12 வயது சிறுவனை கற்பழித்த கன்னியாஸ்திரி பெண் கர்ப்பம்..! பின்பு நடந்தது இது தான்..!

About author

You might also like

மருத்துவம்

நீங்களும் குறட்டை பிரச்சினையில் அவதியுறுகின்றீர்களா?

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் பலரும் குறட்டை பிரச்சினையினால் ;அவதியுறுகின்றார்கள், இவர்களுக்கு எளிய வழியில் பிரச்சினையிலிருந்து விடுடபட தீர்வுகள் சில பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30

மருத்துவம்

உடற்பயிற்சியின் போதும் , வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!

உடற்பயிற்சியின் போதும் சிறு சிறு வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..! ஆமணக்கு மற்றும் பூண்டு: ஆமணக்கு + பூண்டு சம அளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள

மருத்துவம்

தாங்க முடியாத பல்லு வலியா.? உடனடி தீர்வு வேண்டுமா ..? இதோ ..!

எவ்ளோ செயற்கை மருந்துகள் இருந்தாலும் இயற்கை மருந்துக்கு ஈடாகாது. அது போல தான் பல்லு வலிக்கான மருந்தும் .. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும்