பிழைக்க சென்ற தாய் பிணமானதாய் தகவல் உடலை மீட்டுத்தர கோரிக்கை விடுகின்றனர் குடும்பத்தினர்
May 6, 2018 450 Views

பிழைக்க சென்ற தாய் பிணமானதாய் தகவல் உடலை மீட்டுத்தர கோரிக்கை விடுகின்றனர் குடும்பத்தினர்

சவூதியில் மரணமான கட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த தாயின் சடலத்தை பெற்றுத் தருமாறு பிள்ளைகள் கோரிக்கை…!!!!

தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தாய் 34 வயது டைய மருதை வசந்தமல்லிகா என்பவர் 2016 நவம்பர் 30 ஆம் திகதி பணிப் பெண்ணாக சவூதி நாட்டிற்கு சென்றுள்னார் இருப்பினும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக சவூதி நாட்டு தூதுவர் அலுவலகத்தில் இருந்து குறித்த பெண்ணின் கனவருக்கு தொலை பேசி மூலம் அவர் இறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்

மேலும் தொலைபேசி ஊடாக குறித்த பெண் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இறந்து விட்டதாக ஏப்ரல் 10 ஆம் திகதியே அறிவித்துள்ளனர் . இறந்தவரின் சடலம் விசாரனையின் பின்னர் நாட்பிற்கு எனுப்பபடுமென தூதுவராலயத்திலிருந்து அறிவித்துள்ள போதிலும் இன்று வரை சடலத்தை உறவினருக்கு கையளிக்கப்படவில்லை. அத்துடன் அவரின் சடலத்தை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரி க்ளை விடுக்கின்றனர். இப்பெண் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது –

இவருக்கு 4 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றன.
அரச சட்டத்தின் படி 5 வயதிற்கு குறைவான வயதுடைய பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் அவ்ர்களின் பெற்றோர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் வசந்தமல்லிகாவை வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கியது யார்? அவரின் குடும்ப விபரங்களை அறியாறு உறுதிப்படுத்தி எவ்வாறு பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்கு அனுப்பிய அதிகாரிகளுக்கெதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இவ்வாறான Oட்ட விரோதமாக பெண்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் முகவர் நிலையங்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக மும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமல்லவா?

தலவாக்கலையிலுள்ள டுருப் தோட்டம், கட்டுக்கலை தோட்டம், கிளனமெரா தோட்டம், கொரின் தோட்டம் மற்றும் தலவாக்கலை தோட்டம் ஆகிய பகுதிகளில் பல பிள்ளைகளின் பெற்றோர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் அவர்களின் குரும்பங்கள் பெரும்பாலும் பல சமூகப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றன. எனவே பணம் சம்பாதிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு உரிய முறையில் வழிகாட்டல்களையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது யாருடைய பொறுப்பு? என விசனம் தெரிவிக்கப்படுகிறது .

 

Previous ஒரு தலையாய் காதலித்த இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் சேர்ந்து செய்த கேவலமான செயல்..! வேடிக்கை பார்த்த ஊரார்..!
Next பெற்ற மகளையே கற்பழித்த தந்தை - முல்லைத்தீவில் சம்பவம்

You might also like

நிமிடச் செய்திகள்

வலி சுமக்கும் இலங்கை தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

கனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . மே 18 நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று தன் அறிக்கையை விட்டுள்ளர் . இலங்கை

இலங்கைச் செய்தி

நினைவேந்தலில் பரிகாரம் செய்த இரானுவ வீரர்கள் !-

இன்றைய தினம் வடகிழக்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஈழ யுத்தத்தில் மறைந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர் இதன் போது வாகனங்களில் உந்துருளிகளில் ஊர்வலமாக யாழ்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து முல்லைத்தீவு வரை ஊர்வலமாக சென்றனர். இதன் போது யாழ் புதுக்குடியிருப்பு

இலங்கைச் செய்தி

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…! மக்களே அவதானம்…!

இந்த அவல நிலை நாங்களாக தேடிக் கொள்வது . எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர். பெண்கள் கூட பொறுப்பு இன்றி நடந்துகொள்கிறார்கள் என்பதே வேதனைக்குறிய விடயம்..! தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய