அவுஸ்திரேலியாவின் அதிக வருமானம் பெரும் துறையாக மருத்துவதுறை தரப்படுத்தப்பட்டுள்ளது!..
May 8, 2018 75 Views

அவுஸ்திரேலியாவின் அதிக வருமானம் பெரும் துறையாக மருத்துவதுறை தரப்படுத்தப்பட்டுள்ளது!..

ஆஸ்திரேலிய வரித்திணைக்களம், 2015/16ம் நிதியாண்டில் அதிக சம்பளம் பெற்ற தொழிற்துறைகளை, செலுத்தப்பட்ட வரியின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் மிக அதிக வருமானம் பெற்ற முதல் பத்து தொழில்துறைகளின் பட்டியலில் surgeons – அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். அவர்களின் அவ்வருடத்துக்குரிய சராசரி வருமானம் $393,467 ஆக இருந்துள்ளது. இரண்டாமிடத்தில் anaesthetist – மயக்கமருந்து நிபுணர்கள், அவர்களின் சராசரி வருமானம் $359,056 ஆகும்.

முதல் 10 தொழில்துறைகளில் முதல் ஆறு அதிகூடிய வருமானங்களை பெறுபவர்கள் Surgeons, anaesthetists and internal medicine specialists உட்பட வைத்திய துறைகளில் உள்ளோர்களாகும். சாதாரண வைத்தியர்கள் அல்லது GP யினுடைய சராசரி வருமானம் $200,000 ஆகும்.

வைத்தியத்துறை தவிர்ந்த CEOs, managers, financial dealers and psychiatrists ஆகிய தொழில்துறைகளும் முதல் 10 இடங்களுக்குள் அமைகின்றன.

தேசிய ரீதியில் மேற்குறிப்பிட்ட தொழிற்துறையில் முதல் 10 இடங்களுக்குள் அமைந்தாலும், மாநில ரீதியில் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக நாடளாவிய ரீதியில் mining engineers – சுரங்க பொறியியலாளர்கள் முதல் பத்தினுள் வந்தாலும் NSW, VIC மாநில பட்டியலில் அது இடம்பெறவில்லை. அத்துடன் VIC மாநிலப் பட்டியலில் 10வது இடத்தில் air traffic controllers – விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ள அதேவேளை NSW ன் 10வது இடத்தில் இருப்பவர்கள் mathematicians – கணிதவியலாளர்கள் ஆகும்.

Previous ஆண்களே இதனால் விந்து சுரபி அடைப்பட்டு போகுதாம் ..! அவதானமாக இருங்கள்..! அதிகமாக பகிருங்கள்..!
Next புத்தர் சேலையால் வந்த விணை - இளம் பெண் பொலீஸ் விசாரணையில் !

You might also like

உலகச் செய்தி

வெளிநாட்டில் 131 இலங்கையர் அதிரடி கைது..! காரணம் இது தான்..!

எத்தனை அறிவுறுத்தல் செய்தாலும் நம்மவர் கேட்பதாக இல்லை . தவறான வழிகளில் சென்று பின்விளைவுகளில் தினமும் அகப்பட்டுக் கொள்கின்றனர் . அரசும் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் இருகின்றது ..பணமும் பறிபோய் நிம்மதியும் போய் இந்த வாழ்க்கை தேவையா..? அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக

உலகச் செய்தி

பலரால் கொடூரமாக கற்பழித்து கல்லால் அடித்து 14 வயது அப்பாவி மாணவி கொலை..! பதபதைக்க வைக்கும் வெறிச்செயல்.!

உலகில் எல்லா நாடுகளிலும் கொலை சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது அது போல் தான் கற்பழிப்பும் . எங்கு பார்த்தாலும் அதே பேச்சு தான் . ஆனால் கற்பழித்து கல்லாலும் அடித்து கொல்வது என்பது கொடூரத்திலும் கொடூரம் என்று தான் சொல்ல

உலகச் செய்தி

ஆசியாவின் வயதான பிரதமராகிறார் மலேசிய பிரதமர் – மஹதிர் முஹம்மட்

மலேசியாவில் நடத்தப்பட்ட 14ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், 92 வயதான முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மட் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மீண்டும் பெற்றுள்ள நிலையில், இவரது பதவியேற்பு நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது. மலேசிய நாடாளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்கள் 222 பேரைத்