மனுஸ் தடுப்பு முகாம் அகதிகள் மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்களா ? அகதிகளை நியூஸிலாந்துக்கு வழங்க முடியாது என்கிறது அவுஸ்திரேலியா.
May 8, 2018 76 Views

மனுஸ் தடுப்பு முகாம் அகதிகள் மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்களா ? அகதிகளை நியூஸிலாந்துக்கு வழங்க முடியாது என்கிறது அவுஸ்திரேலியா.

பப்புவா நியூகினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள அகதிகளில், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறாதவர்கள் வேறொரு நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்கள் என்பது ‘வெறும் கற்பனையே’ என உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத மனுஸ் அகதிகள் பப்புவா நியூகினியிலேயே நிரந்தரமாக வாழவேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா-ஆஸ்திரேலியா அரசுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, 1200 மனுஸ் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும் அங்கு குடியமர்வதற்காக விண்ணப்பித்த அனைவரது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதில் தெளிவற்றநிலையே காணப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத அகதிகளை மற்றுமொரு மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென லேபர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. எனினும் லேபர் கட்சி கூறுவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் Peter Dutton, குறித்த அகதிகளை குடியமர்த்துவதற்கென மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் மனுஸ் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயார் என அறிவித்துள்ளநிலையில், அங்கு அவர்களைக் குடியமர்த்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் அவ்வாறு குடியமர்த்தினால் ஆட்கடத்தல் வியாபாரம் மீண்டும் சூடுபிடித்துவிடும் என நியாயப்படுத்தியுள்ளார்.

Previous ஜனாதிபதி மாட்டேன் என்றாலும் மக்கள் கட்டாயம் ஓய்வளிப்பார்கள்- வீரவன்ஸ
Next ஆண்களே இதனால் விந்து சுரபி அடைப்பட்டு போகுதாம் ..! அவதானமாக இருங்கள்..! அதிகமாக பகிருங்கள்..!

You might also like

உலகச் செய்தி

மகனையும் பறிகொடுத்து மகனின் ரத்த கறையையும் சுத்தப்படுத்தினாள் பெற்ற தாய் – லண்டனில் சம்பவம்

கொலை செய்யப்பட்ட தன் மகனின் ரத்தகறையை சுத்தம் செய்த தாய் லண்டனில் நடந்தேறிய உருக்கமான சம்பவம் பதினேழு வயதான தனது மகன் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் காய்ந்து போய் கிடந்த 

சினிமா

பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!

வலிகள் பல மனதில் இருந்தாலும் அவற்றை மறைத்து எம்மை மகிழ்விப்பவர்கள் தான் நடிக நடிகைகள்..! அவர்களது மரணம் உண்மையில் பெரிய இழப்பு தான் … பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார். நைஜீரியன்

உலகச் செய்தி

அமெரிக்க அதிபரை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்கா மியாமியில் சம்பவம்

அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏன் சூட்டுச் சம்பவம் நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் அதிபர் டொனால்ட் ட்றம்ப் அவர்களை இலக்கு