விராட் கோஹ்லி வெளியேற்றப்பட்டார் – ஐ பி எல்
May 8, 2018 125 Views

விராட் கோஹ்லி வெளியேற்றப்பட்டார் – ஐ பி எல்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியில் சன்ரைசேர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வில்லியம்சன் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வெற்றியைத் தமதாக்கியது.

முன்னதாக இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து சன்ரைசேர்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது

சன்ரைசேர்ஸ் அணி சீரான இடைவெளிகளில் முதல் மூன்று விக்கெட்டுக்களை இழந்தாலும் நான்காவது விக்கெட்டில் கேன் வில்லியம்சன்-சஹிப் அல் ஹசன் இணை நிலைத்தாடி ஓட்டங்களைப் பெற்றது. வில்லியம்சனின் ஆட்டமிப்பைத் தொடர்ந்து சன்ரைசேர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களைம் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 56 ஓட்டங்களைக் குவிக்க, சஹிப் அல் ஹசன் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிம் சௌத்தி மற்றும் மொகமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்கள்.

சன்ரைசேர்ஸின் அசத்தல் பந்துவீச்சு

பதிலளித்த பெங்களூர் அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களைக் குவித்த போதிலும் மத்திய ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டடுக்களை இழக்க 11.4 ஓவர்களில் 84 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

அதன்பின்னர் வந்த கொலின் கிரான்ட்ஹோம்-மண்டீப் சிங் இணை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியை பெங்களூர் பக்கம் திருப்பினார்.

இறுதி ஓவரில் பெங்களூர் 12 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், இறுதி ஓவரை சன்ரைசேர்ஸ் சார்பாக புவனேஸ்வர குமார் வீசினார். புவனேஸ்வர குமார் இறுதி ஓவரை சிறப்பாக வீச பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பெங்களூர் சார்பாக கோலி 39 ஓட்டங்களைப் பெற, கிரான்ட்ஹோம் 33 ஓட்டங்களைப் பெற்றார்.இவ்வெற்றி மூலம் சன்ரைசேர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஓப் சுற்றிற்கு முன்னேற பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

Previous சாதி யை மீறிய நடிகை ரோஜா..!
Next மணம் முடித்து பத்தே நாட்களில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்..! வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

You might also like

Uncategorized

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !

  கொழும்பு மாநகர சபையின் 1வது பொதுச் சபை கூட்ட சாப்பாட்டு செலவு பதினான்கு லட்சம் ரூபாய் !!!! மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிராகஷ் கண்டனம் கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு கடந்த 05.04.2018 புதிய

Uncategorized

இன்னுமொரு பிரபல தொகுப்பாளினி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் ! – புகைப்படங்கள் உள்ளே …

பிரபலமாவதற்காக எதையும் செய்யத் துணிகிற பலர் இன்று உலகில் நம் முன்னால் பிரபலம் அடந்துள்ளனர் இதில் குறிப்பாக சில  பெண்கள் பலர் தங்களது அழகு மேனியை காட்டி ஆளை மயக்கி வருகின்றனர் பிரபலமாவதற்கு முன்பே பிரபலமாவதற்காக உடல் அழகை கவர்ச்சியாக காட்டும்

விளையாட்டு

எனக்கும் பாலியல் கொடுமை நடந்தது..! பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியின் பேட்டியால் பரபரப்பு..!

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையும் ஏணோ தானோ என்று செல்கிறது தற்போது. பலர் பிரிந்து உள்ளனர் பலர் பிரியும் நிலையும் உள்ளது. ஷமியின் நிலையும் அப்படி தான் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹன் தனது