இன்றைய நாளும் இன்றைய பலனும்…!
May 8, 2018 463 Views

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 09-05-2018, சித்திரை 26, புதன்கிழமை, நவமி திதி இரவு 10.27 வரை பின்பு தேய்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 10.12 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 10.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிபலன்
5/9/2018
மேஷம்
மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோக த்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் வந்து நீங்கும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
கன்னி: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பிரியமானவர்க ளின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு
தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்துப் போகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
மீனம்
மீனம்: எடுத்த வேலை யை முடிப்பதற்குள் அலைச்சல் அதிக ரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் சிவாஜி கனேசன் வீட்டிற்கு மருமகள் ஆகும் சுஜா வருணி..!
Next பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணம்..! அப்பாவி புது மாப்பிள்ளைக்கு மனைவி செய்த கொடூரம்..! இப்படியும் ஒரு பெண்ணா..?

You might also like

நிமிடச் செய்திகள்

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்ய மருந்து கிடையாது -WHO

உலக சுகாதார நிறுவனமும்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் வகையிலான மருந்தோ மாத்திரையோ இதுவரை கிடையாது என்றும் அப்படியான ஒன்று புழக்கத்தில் இல்லை என்றும் அது கூறியுள்ளது. ஆகவே உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலந்து

நிமிடச் செய்திகள்

தாலிகட்ட தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளைக்கு பளார்..! சினிமாவை மிஞ்சிய நிஜம்..! நீங்களே பாருங்க..!

சினிமாவில் இதுவரை நாம் பார்த்த பல விடயங்கள் இப்போது நேரிலும் பார்க்கிறோம் அட ஆமாங்க இத படியுங்க…சாக் ஆகிடுவீங்க…. உத்திரபிரதேசத்தில் 24 வயது நபர் ஒருவர் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டும் நேத்தில் ஹீரோ போல் என்ட்ரி

நிமிடச் செய்திகள்

ஓடும் இரயிலில் காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் செயல் ..! மக்கள் எடுத்த அதிரடி முடிவு..!

காதல் ஜோடிகள் செய்யும் சேட்டைகள் அளவு மீறி போய்கொண்டிருக்கிறது ..எங்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியாது பெரியவர்களும் சின்னவர்களும் இருக்கும் இடங்களில் காம களியாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற தரக்குறைவான செயல்களால் முகம் சுழிக்க வைக்கின்றனர்..! கொல்கத்தா மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி