18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் இதை செய்யுங்கள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்..!
May 9, 2018 1591 Views

18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் இதை செய்யுங்கள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்..!

எவ்வளவு தான் வைத்திய ஆலோசனை கிடைத்தாலும் நாம் வைத்தியர் பேச்சை கேட்பதில்லை எம் விரும்பம் எதுவோ அதன் படி தான் செய்வோம் சாப்பாட்டு கட்டுப் பாடு இருக்காது தண்ணீர் குடிக்க மாட்டோம் கேட்டால் நேரம் இல்லை என்போம் .

பின் விளைவுகளை சந்திக்கும் போது தான் உணர்வோம் .. பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொறுத்து சிறுநீரக அளவு வெளியேறுவது வேறுபடலாம்.

18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார்கள்.
சிலவகையான மருந்துகளாலும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுகிறது. சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் 60 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளுங்கள்.
அறிகுறிகள்
வழக்கத்துக்கு மாறாக அதிகமாக அல்லது குறைவான அளவில் சிறுநீர் வெளியேறுவது.
நுரைபோன்ற சிறுநீர் வருவது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.

சிறுநீரகம் வெளியேறாமல் இருக்கும்போது, கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.
சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.
சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக மாறும்போது, இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தம்பியின் மனைவியை வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கிய அண்ணன்..! கொடூரத்தின் உச்சம்..!
Next தம்பியின் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்த அண்ணனின் வெறிச்செயல் - இந்தியாவில் சம்பவம்

You might also like

மருத்துவம்

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி எமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை அகற்றுவதற்கு சுலபமான வழிகள் இயற்கை மருத்துவ முறைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. மனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை

மருத்துவம்

உங்கள் தலைமுடி பிரச்சினைகளுக்கு எளிய வழிகளில்தீர்வு

உங்களின் தலைமுடி பிரச்சினைகளுக்கு எளிய வழிகளில் செலவு இல்லாது பல்வேறு தீர்வுகள் பற்றி கலந்துரையாடுவோம் வாருங்கள். கூந்தல் அடர்த்தியாக இருப்பதுதான் அழகு. அடர்த்தியான கூந்தல் பெற, பராமரிப்புடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் முடி உதிர்தலை கட்டுப்படுத்துவது. ஏனென்றால் நீங்கள்

மருத்துவம்

இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!

நாம் மசாஜ் செய்வது என்றால் உடனடியாக வெளியே சென்று விடுகிறோம் அதற்காக கணக்கின்றி பணத்தையும் செலவு செய்கிறோம் பலன் கிடைத்ததா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை . வீட்டில் இருந்த படியே இதை மட்டும் செய்யுங்கள் பின் பாருங்கள்..! எமது உடலில்