இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
May 10, 2018 506 Views

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 11-05-2018, சித்திரை 28, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.43 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.25 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிபலன்
5/11/2018
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுது ணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.
கன்னி
கன்னி: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களுக்கு கேற்ப நீங்கள் நடந்துக் கொள்வீர்கள். அவர்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொட ங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்
ம:கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஹன்சிகாவா இது ..? என்னாச்சி இவருக்கு .? இப்படி ஆகிட்டரே...?
Next நடிகர் சரத்குமாரிடம் வேலை செய்த இவரால் வரலக்ஸ்மி சரத்குமாருக்கு பாலியல் துஷ்பிரயோகம்..!

You might also like

நிமிடச் செய்திகள்

தமிழகத்தின் குரங்கணியில் இடம்பெற்ற காட்டுத் தீயில் 9 பேர் பலி

தமிழகத்தின் குரங்கணியில் இடம்பெற்ற காட்டுத் தீ சம்பவத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்

நிமிடச் செய்திகள்

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் முன்வைக்க கூட்டு எதிர்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தலைமையில் நேற்று (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கலந்துரையாடலில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

நிமிடச் செய்திகள்

துடிக்க துடிக்க ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்..! திடுக்கிடும் காரணம்…!

கொலை கொள்ளை கற்பழிப்பு உலகை ஆட்டிப் படைக்கும் விடயங்கள் இது தான் .இதோ இன்னுமொரு விடயம் இப்படியும் சில மாணவர்கள் ..! ஹரியானாவின் யமுனா நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுருந்து வந்தவர் ரித்து சாஹப்ரா(47).