ஆபாசபட விவகாரம் ஆத்திரத்தில் பிரபல தமிழ்  நடிகை . அதிர்ச்சியில் சினி உலகம்..!
May 10, 2018 773 Views

ஆபாசபட விவகாரம் ஆத்திரத்தில் பிரபல தமிழ் நடிகை . அதிர்ச்சியில் சினி உலகம்..!

ஆபாச புகைப்பட விவகாரம் தொடர்பாக, விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிவேதா பெத்துராஜ் கடுமையாக சாடியிருக்கிறார்.

ஜெயம் ரவியுடன் ‘டிக்:டிக்:டிக்’, வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் எழில் இயக்கத்தில் ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். சமீபமாக வேறு ஒரு நடிகையின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு, இது நிவேதா பெத்துராஜ் தான் என்று சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது:

”கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவனக்குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.ஆயினும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை”.

இவ்வாறு நிவேதா பெத்துராஜ் தெரிவித்திருக்கிறார்.

Previous ஆசியாவின் வயதான பிரதமராகிறார் மலேசிய பிரதமர் - மஹதிர் முஹம்மட்
Next எதுவும் வேண்டாம் இது மட்டும் போதும் .. சீரகத்தை இப்படி செய்து குடியுங்கள் ..! இந்த நோய்களை ஓட ஓட விரட்டுங்கள்..!

You might also like

சினிமா

240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை ..! கொன்றது இவர்களா.? அதிர்ச்சி தகவல்..!

நடிகை ஸ்ரீதேவி திடீர் என திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையில் மரணித்திருந்தார் ..! மர்ம மரணம் இது என எல்லாருக்குமே தெரியும். . ஆனால் கொலை என தெரிய வர அதிர்ச்சியாகி உள்ளது ..! நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை

சினிமா

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி உடன் வீடியோவில் சிக்கிய ரியோ…! மனைவி எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

டிடியின் செய்தி அதாவது வீடியோ ஒன்று புதிதாக ரிலீஸ் ஆனது அனைவரும் அறிந்ததே…! பிரபல டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் கதாநாயகன் ரியோ சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த

சினிமா

சிவகர்த்திகேயன் தனுசுக்கு இவ்வாறு செய்யலாமா?

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது படத்தில் தனுஸ் பட நாயகியை ஜோடியாக இணைத்தக் கொள்ளும முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தனுசுடன் நடித்து வரும் பிரபல நடிகையை, தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில்