4 காதலர்கள் இருக்கும் துணிவில் கணவனை 3 துண்டுகளாக்கிய மனைவி ..! இந்தியாவில் கொடூரம்..!
May 10, 2018 1039 Views

4 காதலர்கள் இருக்கும் துணிவில் கணவனை 3 துண்டுகளாக்கிய மனைவி ..! இந்தியாவில் கொடூரம்..!

அன்றைய காலத்தில் ஆண்கள் தவறு செய்வார்கள் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள்.. பெண்களின் தவறு மிகவும் குறைவாக இருந்தது இன்றைய காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் தவறு செய்கிறார்கள் .

நிச்சயம் இனி யாரும் யாரையும் திருத்த முயற்சிக்க கூட முடியாது ..! கோவாவில் தனது 4 காதலர்களின் உதவியுடன் கணவனை கொலை செய்து காட்டுக்குள் வீசிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பசவராஜ் பாரிகி என்பவரது மனைவி கல்பனா. டாக்ஸி ஓட்டுநராக பணிபுரியும் பசவராஜ் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார்.

இதற்கிடையில் கல்பனாவக்கு 4 காதலர்கள் இருந்துள்ளனர். இதனால், மனைவியுடன் அடிக்கடி பசவராஜ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் தன்னிடம் சண்டை போடுவது குறித்து கல்பனா தன் காதலர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வீட்டுக்கு வந்த பசவராஜ் வழக்கம்போல் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அந்தச் சமயத்தில் காதலர்களை கல்பனா வரவழைத்தார்.

பின், கணவரைக் கொலை செய்யும் ஐடியாவைக் கூறினார். பசவராஜ், உறங்கிய பின் அவரைக் கயிற்றால் கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை மூன்று துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் அடைத்து கோவாவில் மூன்று பகுதிகளில் வீசி விட்டு ஓடி விட்டனர்.

இந்நிலையில், மலைப் பகுதியில் மனித உடல் பகுதி கிடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கணவரை கல்பனா, காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

காதலர்கள் சுரேஷ்குமார், பங்கஜ் குமார், அப்துல் ஷேக் ஆகியோரும் பிடிபட்டனர். நான்காவது நபரான ஆதித்யா குஜ்ஜார் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது - எரிபொருள் நிலையங்களில் பாரிய வாகன நெரிசல் !
Next யாருக்கும் சொல்லாதீங்க இது ரகசியம்...! அட ஆமாங்க இத்தனை விடயங்களா ..நீங்களே பாருங்கள்..!

You might also like

இந்தியச் செய்தி

எம் எல் ஏவின் மனைவியிடம் 15 கோடி ரூபாய்கள் பேரம் !- அம்பலம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் இல்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களின் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பா ஜ க இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு

இந்தியச் செய்தி

ஈழ தமிழருக்கு மெரீனா வில் நினைவேந்தல் நடத்திய தமிழர்கள் கைது ..!

ஈழ தமிழருக்காக எல்லாரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் சென்னையிலும் மக்கள் தங்கள் பிராத்தனைகளோடு கலந்து கொண்டனர் ஆனால் சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்தியச் செய்தி

அதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்

கோபி செட்டி பாளையத்தில்,  லாட்டரி டிக்கெட் வாங்குவதில் அடிமை ஆகி உள்ள பலர், வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை எல்லாம் விற்று இந்த சீட்டுகளை வாங்கி ஏமாறுகின்றனர். இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, போலீசில், உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் சரியானபடி சென்று